ஓணம்!
இன்று ஓணம் பண்டிகை! கேரளத்தில் முக்கிய விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படு கின்றது.
இந்து மதத்தில் பண்டிகை களுக்குப் பஞ்சம் இல்லை. பண்டிகை பெருகினால்தானே பார்ப்பனரின் தொந்திக் குதிர் நிரம்பி வழியும்.
இதோ அந்தப் புராணஅளப்பு!
மாவலி மன்னன் பொற்கால ஆட்சியை நடத்திய மாபெரும் மன்னன்! கொடை வள்ளல்! மாவலியின் புகழ் விண்ணுலகம் வரை பரவிற்றாம்?
தேவலோக அதிபதியான இந்திரனுக்குப் பொறாமை பீறிட்டுக் கிளம்பியதாம். எங்கே தன் பதவிக்கே ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டதாம்.
இந்திரனின் வேண்டுகோளை ஏற்று மகாவிஷ்ணு ‘வாமனன்’ என்ற குள்ளப் பார்ப்பான் அவதாரம் எடுத்தானாம். மாவலி மன்னன் யாகம் ஒன்றைச் செய்து கொண்டு இருந்தபோது, அங்கு வந்த வாமனனிடம் ‘வேண்டிய தானத்தைக் கேளுங்கள்!’ என்று சூதுவாது அறியாத மன்னர் மாவலி கேட்டாராம்.
குள்ளப் பார்ப்பான் வாமனனோ ‘எனது காலடி அளவால் மூன்று அடி நிலம் வேண்டும்’ என்றானாம்.
அதற்கு மன்னர் மாவலியும் சம்மதித்தானாம். சூழ்ச்சிக்கார குள்ளப் பார்ப்பான் வாமனனோ முதல் அடியை பூமி முழுவதும் அளந்தானாம். இரண்டாம் அடியில் ஆகாயம் மற்றும் விண்ணுலகத்தை அளந்தானாம்.மூன்றாவது அடியை எங்கே வைப்பது? என்று கேட்டபோது ‘என் தலைமீது வையுங்கள்’ என் றானாம் அசுரகுல மன்னவனான மாவலி! குள்ள நரி வாமனன் என்ன செய்தானாம்?
விஷ்ணு அவதாரமான வாமனன் தன் பாதத்தை மன்னன் மாவலியின் தலையில் வைத்து அழுத்திப் பாதாள உலகத்திற்கு அனுப்பி வைத்தானாம்.
உயிர் துறக்கும்முன் மாவலி மன்னன், வாமனனிடம் ஒருவரம் கேட்டானாம். ‘‘ஆண்டுக்கு ஒரு முறை என் நாட்டு மக்களை நான் வந்து பார்க்க அனு மதிக்க வேண்டும்’’ என்று கெஞ்சினானாம். அந்த நாளே இந்த ஓணம் பண்டிகையாம். கேரளம் மக்கள் வீட்டுக்கு வீடு கோலம் போட்டு இந்நாளில் மாவலியை மகிழ்விப்பதாக ஒரு புராணப் புளுகு.
நரகாசுரன் என்ற அசுர குலத்தவனை மகாவிஷ்ணு அவதாரம் எடுத்துக் கொல்ல வில்லையா? அந்த நாளைத் தானே தீபாவளியாகக் கொண் டாடி வருகிறார்கள்.
நரசிம்ம அவதாரம் எடுத்து அசுர குல இரணியனைச் சூழ்ச்சி யால் கொல்லவில்லையா?
அவதாரம் எடுத்தவன் எல்லாம் ஆரியன். படுகொலை செய்யப்பட்டவன் எல்லாம் அசுரகுல திராவிடன்.
ஓணம் என்ற பெயர்க் காரணம் – திருவோணம் நட்சத்திரத்தில் இது கொண்டாடப்படுவதுதான்.
இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித்ஷா ஓணம் விழா என்பதற்குப் பதிலாக ‘வாமன ஜெயந்தி’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று சொன்னதிலும் சூழ்ச்சி இருப்பது புரியவில்லையா?
– மயிலாடன்
