சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிக்காக மாதந்தோறும் வழங்கும் ரூ. 3 லட்சம் மதிப்பூதியத்தை நன்கொடை கொடுத்த ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 22- சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளைக் கண்காணிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன், மாதம் ரூ.3 லட்சம் வீதம் தனக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை வேண்டாம் என மறுத்துள்ளார். அந்தத் தொகையை சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு, தமிழ்நாட்டில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த பணிகளைக் கண்காணிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளான ஏ.செல்வம் மற்றும் வி.பாரதிதாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்தப் பணிகளுக்காக நீதிபதிகளுக்கு தலா ரூ.3 லட்சம் மாதந்தோறும் மதிப்புதியம் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன், சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் காவர்லா உஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி களைக் கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் தனக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் ரூ.3 லட்சம் மதிப்புதியத்தைப் பெற விரும்பவில்லை. அந்த தொகையை தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக, சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்கு மாவட்ட கனிம நிதியில் இருந்து ரூ.5 கோடியை 2 வாரங்களில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *