மாரவாடி, செப். 21- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் மாரவாடி கி.கோவேந்தன், விசிக கட்சியின் மூத்த நிர்வாகி கி.இராஜா என்கிற மன்னன் ஆகியோரின் தாயார் குள்ளம்மாள் கிருஷ்ணன் வயது மூப்பு உடல்நலக் குறைவு காரணமாக 17-09-2026 அன்று இரவு மாரவாடி கிராமம் அவரின் இல்லத்தில் மறைவுற்றார்.
அம்மையாரின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் தலைமையில், மாவட்டச் செயலாளர் கருப்புச் சட்டை மா.முனியப்பன் ஒருங்கிணைப்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட துணைத் தலைவர் எல்.அய்.சி. மு.பரமசிவன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கதிர்.செந்தில் குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, நகரத் தலைவர் கரு.பாலன், விவசாயி அணி மாவட்ட தலைவர் ஊமை.காந்தி, நகர இளைஞரணி கண்.இராமச்சந் திரன், இளைஞரணி அ.பிரபாகரன், இளைஞரணி மாரவாடி க.பிரகாஷ், ஊமை கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
