கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.9.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* தவெக மற்றும் அதன் ஆட்சி கனவைக் கடுமையாக விமர்சித்து, மக்கள் நலத்திட்டங்களை நிறுத்துவதாகவும், கடந்த ஆட்சியின் திட்டங்களை பெயர் மாற்றி செயல்படுத்துவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து, மக்களுக்காக தொடர்ந்து செயல்படும் வாய்ப்பை வழங்குமாறு வேண்டுகோள்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ராகுல் காந்தி, இந்தியக் கல்வி முறையில் உள்ள “அழுகலை” சரிசெய்யாமல் ஒன்றிய அரசு கல்வியை தனியார்மயமாக்கி வருவதாகவும், அரசுப் பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு. மாணவர்களின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; கல்வி நிறுவனங்களை  சீர்குலைக்கும் வகையில் அரசின் கொள்கைகள் அமையக்கூடாது என்றும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாணவர்களின் குரல்) நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாஜக பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம் நீக்கம்: ஒரு பெண் கட்சி நிர்வாகி அளித்த பாலியல் புகார் அடிப்படையில், உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முருகானந்தம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து  நீக்கம். 2026 தேர்தலில் சிறீரங்கம் தொகுதியில் போட்டியிட உதவுவதாகவும், திருமணம் செய்வதாகவும் அவர் உறுதி அளித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நந்திகிராம் இடைத்தேர்தல்: கபில் சிபல் குற்றச்சாட்டு: நந்திகிராம் இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணையம் மற்றும் மாநில நிர்வாகத்தின் செயல்பாடு களை கபில் சிபல் விமர்சித்து, அவை “ஜனநாயகத்தின் படுகொலை” எனக் குற்றச்சாட்டு. மேலும், தேர்தல் ஆணையத்துக்கும் பாஜகவுக்கும் இடையே “முறையற்ற தொடர்பு” இருப்பதாக விமர்சனம்.

தி டெலிகிராப்:

* உத்தரப் பிரதேச தேர்தலுக்கு முன்பு இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கோரிக்கைகளை முன்வைத்து தீவிர போராட்டத்தில் இறங்கிய உயர் ஜாதியினர், கடந்த 20 நாட்களாக வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள சாஸ்திரி காட்டில் அமர்ந்து போராட்டம். “ஒதுக்கீடு பெறும் பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாக்க, பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிமுறைகளில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங் களை அரசு திரும்பப் பெற வேண்டும் அத்துடன், இடஒதுக்கீட்டுக் கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்,” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ‘பிராமண சமாஜ்’ அமைப்பின் தலைவர் பிரிஜேஷ் மிஸ்ரா பேச்சு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஹிந்துத்துவ வலதுசாரி வகுப்புவாதமே இந்தியாவுக்கு ஆபத்து: மேனாள் துணைக் குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து: நேருவின் கருத்துகளை மேற்கோள் காட்டி தெரிவித்தார். அப்துல் கஃபூர் நூரானியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர் இக்கருத்துகளை தெரிவித்தார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *