சென்னை, செப். 16- தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்காகச் செயல்படுத்தி வரும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்’ விரிவாக்க தொடக்க விழா, திட்டமிட்டபடி செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு பதிலாக வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தொடக்க விழா: சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைப்பார்.
விரிவாக்கம்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அத்தொகுதிகள் அமைந்துள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து மாநிலத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் செப்டம்பர் 22 அன்று அமலுக்கு வரும். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக இந்தத் தொடக்க விழா செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அறிஞர் அண்ணா பிறந்த நாளில் (செப்.15) தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தாய்மாமன் தங்கமோதிரத் திட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
