தந்தை பெரியார் அவர் களின் 148ஆம் ஆண்டு பிறந்தநாளான 17.9.2026, வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை, தென் சென்னை மாவட்டத் திரா விடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.
* காலை 7.30 மணிக்கு வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் பட்டாளத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
* காலை 7.30 மணிக்கு சென்னை – தியாகராய நகரிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.
* காலை 8 மணிக்கு சென்னை – அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணியினர் மாலை அணிவிப்பர்.
* காலை 7.30 மணிக்கு ஆலந்தூர் நகர மன்றம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தாம்பரம் மாவட்டக் கழகத்தினர் மாலை அணிவிப்பர்.
* காலை 10.00 மணிக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை – பெரியார் திடலிலுள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்து, அய்யா, அம்மா நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து கழகத்தினர் மரியாதை செலுத்துவர்.
* மாலை 6.30 மணிக்கு உலகத் தலைவர் அறிவாசான் தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – பொதுக் கூட்டம், இடம்: பெரவள்ளூர் சதுக்கம், அகரம், பெரம்பூர், சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
