தந்தை பெரியார் பிறந்த நாள் மகிழ்வாக இருசக்கர வாகனப் பேரணி, பெரியார் பட ஊர்வலம், கழக நூல் பரப்புரை, கொள்கை திருவிழாவாக கொண்டாடிட ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஒரத்தநாடு, செப். 15- 10-09-2026 அன்று மாலை 06.00 மணியளவில் தாரா காலனி பேருந்து நிலையம் அருகில் ஒரத்தநாடு பு.செந்தில் குமார் இல்லத்தில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கழகத் தலைவர் சி.அமர்சிங், தலைமை வகித்து உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் ரெ.சுப்பிரமணியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குண சேகரன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, கருத்துரை வழங்கினர்.

தொடர்ந்து மாநில கலைத்துறை செயலாளர் ச. சித்தார்த்தன், வடக்கு ஒன்றிய தலைவர் இரா. துரைராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் அ. சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கோ.ராமமூர்த்தி, நகரத் தலைவர் பேபி.ரெ. ரவிச்சந்திரன், நகர செயலாளர் பு. செந்தில்குமார், நகர இளைஞர் அணி செயலாளர் ம.சாக்ரடீஸ் நகர இளைஞரணி ஒன்றிய துனைச் செயலாளர் அ.மாதவன், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, நகர இளைஞரணி துணைத் தலைவர் ஆ.சக்கரவர்த்தி, தஞ்சை மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி. என்.குணசேகரன், தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் வெ.துரை, ஊரச்சி கிளை தலைவர் அ.திருநாவுக்கரசு, நெடுவை கிளைச் செயலாளர் வெ.விமல், தஞ்சை உதயபிரகாஷ், குலமங்கலம் கிளைச் செயலாளர் கணேசன், குலமங்கலம் சாமிநாதன், ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

நகர இளைஞரணித் தலைவர் ச. பிரபாகரன், தொடக்கத்தில் கடவுள் மறுப்புக் கூறி இறுதியாக நன்றி கூறினார்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரங்கல் தீர்மானம் ஒரத்தநாடு ஒன்றிய மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சேதுராயன் குடிகாடு மா.இராஜப்பன், தெற்கு நத்தம் கணேசன் தாயார் பொ.பவுனம்மாள், ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் வீர வணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறது தீர்மானம் -2

செப்டம்பர் -3 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக செயற்குழு கூட்ட தீர்மானத் தினை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

உலகத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ் வாக செப்டம்பர் -17 அன்று ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகரம் சார்பில் கிளைக் கழகம், ஒன்றியம், நகரம், முழுவதும் இருசக்கர வாகனப் பேரணியாக சென்று கழகக் கொடியேற்றி தந்தை பெரியார் சிலை மற்றும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்வது. பெரியார் பட ஊர்வலம். தெரு முனைக் கூட்டம் நடத்துதல்.

செப்டம்பர் -19 தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, அவர்கள் கலந்து கொள்ளும் சமூக நீதி பயணம் “பெரியார் நடை” (PERIYAR WALK ) நிகழ்வில் அதிக அளவில் தோழர்களை பங்கேற்கச் செய்வது எனவும்.

செப்டம்பர் 27 அன்று பெரியார் கொள்கைக் குடும் பங்கள் ஒன்று கூடல் (குடும்ப விருந்து) தஞ்சையிலும், அக் டோபர்-3 தஞ்சை மாவட்ட அளவில் “பெரியார் கேட்கும் கேள்வி” புத்தகம் பரப்புரை செய்தல். மேற்கண்ட நிகழ்வு களுக்கு ஒரத்தநாடு ஒன்றியம் நகர சார்பாக பெருமளவில் பங்கேற்பது என முடிவு செய்யப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *