பெரியார் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விருந்து, பெரியார் கேட்கும் கேள்வி நூல் பரப்புரை, கொள்கைத் திருவிழாவாக – நன்றிப் பெருவிழாவாக கொண்டாடிட நாகப்பட்டினம் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாகை, செப். 15- நாகை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 11.09.2026 அன்று மாலை 6 மணியளவில் ஓய்வூதிய சங்கக் கட்டடத்தில்  நடைப்பெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி தலைமைக் கழகச் செயற்குழுவின் தீர்மானங்களை செயல்படுத்தி, அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாள் விழாவினை எழுச்சி யோடு கொண்டாடுவது தொடர்பாக மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக் குமார், தலைமையேற்று உரை யாற்றினார்.

நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்டச் செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா, காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன். பன்னீர்செல்வம், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி,

மாநில மாணவர் கழக இணைச் செயலாளர் மு.இள மாறன், மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு, மாவட்ட துணைத் தலைவர் கி.சுர்ஜித், நாகை நகரத் தலைவர் தெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையேற்று உரை நிகழ்த்தினர்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம், மாவட்ட இணை தலைவர் துரைசாமி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.முத்துக் கிருஷ்ணன், மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர் காமராஜ்,  மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா, மாவட்ட மகளிரணி தலைவர் பு.அலமேலு, மாவட்ட மகளி ரணிச் செயலாளர் இரா.பேபி, கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார், திருமருகல் ஒன்றியத் தலைவர் இராச.முருகையன், திருமருகல் ஒன்றிய செயலாளர் சு.இராஜ்மோகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கு. கமலராஜன், திருமருகல் ஒன்றிய துணை தலைவர் மு.சின்னதுரை, திருமருகல் இளைஞர் அணி செயலாளர் தீபன்.சக்கரவர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செ.பாக்கியராஜ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி, கீழ்வேளூர் நகர செயலாளர் பன்னீர்செல்வம், காரைக்கால் இளைஞரணி செயலாளர் லூயிஸ்பியர், நாகை நகர செயலாளர் சண்.ரவிகுமார், திருமருகல் ஒன்றிய அமைப்பாளர் ப.செல்வகுமார், குருக்கத்தி தமிழ்ச்செல்வன், கொட்டாரக்குடி வீரமணி, சிக்கல் யாகப்பா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

தீர்மானங்கள்

உலகத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்த நாள் செப்பம்பர்-17 அன்று நாகை மாவட்டம், நகரம், ஒன்றியங்கள், பேரூர், கிளைக் கழகம் முழுவதும் தந்தை பெரியார் சிலைகள் மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து இல்லம் தோறும் கழக லட்சியக் கொடியேற்றி, மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தந்தை பெரியார் பிறந்த நாள் மகிழ்வாக செப்டம்பர் – 20 அன்று நாகப்பட்டினத்தில் காலை 6.30 மணிக்கு சமூகநீதிக் கான பெரியார் நடை (PERIYAR WALK) நிகழ்வு நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

அக்டோபர் 3 அன்று நாகை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கொள்கை குடும்ப விழா நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

நாகை மாவட்டம் முழுவதும் திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் செப்டம்பர் மாத இறுதிக்குள் ” பெரியார் கேட்கும் கேள்வி” என்ற புத்தகத்தை பரப்புரை செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

அக்டோபர் 10 திருமருகலில் பெரியார் பட ஊர்வலம், மாலை பொதுக் கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

செப்டம்பர் 3 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுச் செயல்படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *