மீண்டும் தொடரும்… வடகலை – தென்கலை சண்டை, ஆபாச அர்ச்சனைகள்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

காஞ்சீபுரம், செப். 15- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின்போது, வடகலை மற்றும் தென்கலைப் பிரிவினருக்கு இடையே திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது அடிதடியாக முற்றியது. பொதுமக்கள் முன்னிலையில் கோவிலுக்குள்ளாகவே ஆபாச வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் அர்சித்துகொண்டனர்

வைகாசி பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, இன்று (15.9.2026) காலை தேவி, பூதேவி, வரதராஜ பெருமாள் சிலைகளை சந்திர பிரபை என்று பெயர் கொண்ட வண்டியில் வைத்து இழுத்துவந்தனர்.

சிலைகள் கங்கைகொண்டான் மண்டபத்தில் வந்த போது, பாடல்கள் பாடுவது மற்றும் பூஜைகள் செய்வது தொடர்பான நடைமுறைகள் குறித்து இரு பிரிவினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது . இந்த வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கத் துவங்கியதோடு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்துகொண்டனர்.

இதனால் கோவிலுக்கு வந்தவர்கள் முகம் அளித்தனர். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே மத்தியஸ்தர் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, சிலைகளுக்கு முன்பாக தென்கலைப் பிரிவினர் திவ்ய பிரபந்தம் பாடிச் செல்லவும், சிலைக்குப் பின்புறம் வடகலைப் பிரிவினர் வேத பாராயணம் செய்து செல்லவும் முறை வகுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரம்மோற்சவத்தின்போதும் இதுபோன்ற காரணங்களுக்காக இரு பிரிவினரும் தொடர்ச்சியாக மோதலில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக இப்படி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவேளை, இதனால் அவர்களுக்கு இலவச விளம்பரம் கிடைக்கிறது என்பதால் இவ்வாறு தொடர்ச்சியாக செய்கிறார்களா? என்றும் கேள்வி எழுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *