அரசு ஊழியர்களுக்கு ‘டேப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்! நிதி அமைச்சர் அறிவிப்பு

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 19- அரசு ஊழியர்களுக்கு ‘டேப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரியவில்சன் உறுதி அளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று (18.8.2026) நடந்த விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு, ‘‘அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள். திமுக அரசு அறிவித்த தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (‘டேப்ஸ்’) தொடருமா அல்லது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவீர்களா?’’ என கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் மரியவில்சன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி, ‘டேப்ஸ்’ ஓய்வூதியத் திட்டத்தை பரிந்துரை செய்தது.

அதன்படி, அரசு ஊழியர்கள் கடைசியாக பெறும் அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டன. அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு ‘டேப்ஸ்’ திட்டம் கண்டிப்பாக செயல் படுத்தப்படும்.

விதிமுறைகள் உருவாக்கம்

தற்போது இடைக்கால ஓய்வூதியம் வழங்கும் பணியை ஆரம்பித்து விட்டோம். ‘டேப்ஸ்’ திட்டத்துக்கான விதிமுறைகளும், வழிகாட்டுதல்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே, அரசு ஊழியர்களுக்கு ‘டேப்ஸ்’ திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசின் நடப்பு நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதியத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி குறைக்கப்பட்ட நிலையில், ‘டேப்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்படுமா? இல்லையா? என்ற சந்தேகம் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதுதொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளிட்ட சங்கங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்நிலையில், அரசு ஊழியர் களுக்கு ‘டேப்ஸ்’ திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்பதை அரசு தெளிவு படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *