எந்த ஊரில், மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தினார்களோ, எந்த ஊரில் கருப்புச்சட்டைப் படை வரக்கூடாது என்று நினைத்தார்களோ, இந்தக் கொள்கை வளரக்கூடாது என்று சொன்னார்களோ
அதே ஊரில் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டது
எங்களை விரட்டினாலும், தாக்கினாலும், எங்கள் மீது
அவதூறு சொன்னாலும், இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது!
அதே ஊரில் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டது
எங்களை விரட்டினாலும், தாக்கினாலும், எங்கள் மீது
அவதூறு சொன்னாலும், இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது!
மதுரை, செப்.13 எந்த ஊரில், மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தினார்களோ, எந்த ஊரில் கருப்புச்சட்டைப் படை வரக்கூடாது என்று நினைத்தார்களோ, இந்தக் கொள்கை வளரக்கூடாது என்று சொன்னார்களோ அதே ஊரில் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டது. எங்களை விரட்டினாலும், தாக்கினாலும், எங்கள் மீது அவதூறு சொன்னாலும், இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- எந்த ஊரில், மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தினார்களோ, எந்த ஊரில் கருப்புச்சட்டைப் படை வரக்கூடாது என்று நினைத்தார்களோ, இந்தக் கொள்கை வளரக்கூடாது என்று சொன்னார்களோ அதே ஊரில் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டது எங்களை விரட்டினாலும், தாக்கினாலும், எங்கள் மீது அவதூறு சொன்னாலும், இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது!
- மதுரையில் ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு!
- 1944 இல் கடலூரில் இளம் திராவிடர் கழகம் திறப்பு!
- எதிர்ப்பு எழுந்த ஊரில், தந்தை பெரியாருக்குச் சிலை!
- எங்களை விரட்டினாலும், தாக்கினாலும், எங்கள் மீது அவதூறு சொன்னாலும், இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது!
- மனுதர்ம உணர்வினால் வந்ததுதான் நீட் தேர்வு!
- காரணம், பெரியார்! திராவிட இயக்கம்! சுயமரியாதை இயக்கம்!
- ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’
- ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்; ஆனால் மனு ஸ்மிருதியைக் கையோடு கொண்டு வந்தனர்!
மதுரையில் ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு!
்கடந்த 21.08.2026 அன்று மாலை 5.30 மணிக்கு, மதுரை மாநகர் – புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு’’ மதுரை ஓபுளா படித்துறை அருகில் நடைபெற்றது. சுயமரியாதைச் சுடரொளிகளான கு.துரைராஜ், பே.தேவசகாயம், அன்னத்தாயம்மாள், வழக்குரைஞர்கள் சி.மகேந்திரன், மு.சித்தார்த்தன் ஆகியோர் நினைவாக மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாகத்தான் தோழர்களே, இந்த மாநாட்டை பற்றி மதுரையில் நடந்தது என்ன? என்று தந்தை பெரியார் தலையங்கம் எழுதியிருக்கிறார்.
இவை எல்லாம் 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற செய்திகள். அதுமட்டுமல்ல, இன்னொரு செய்தி உங்களுக்குச் சொல்ல வேண்டும். இது என்னைப் பொறுத்தது என்றாலும், இந்த இயக்கம் இளைஞர் இயக்கமாக தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் எப்படி நடந்தது என்பதைப்பற்றி ஒரு குறிப்பு. இதைப் பார்க்கும்போது எனக்கே நினைவில்லை. ‘குடிஅரசு’ ஏட்டைப் புரட்டிப் பார்க்கும்போது, இந்த அடிச்சுவடு – வரலாற்றினுடைய அடிச்சுவடு ‘‘Foot prints of the Sons of Time’’ என்று சொல்வார்கள்.
1944 இல் கடலூரில்
இளம் திராவிடர் கழகம் திறப்பு!
இளம் திராவிடர் கழகம் திறப்பு!
இந்த ‘குடிஅரசு’ 13.4.1944 இல் ‘‘கடலூர் ஓட்டி, வீரபத்திர சாமி கோயில் தெரு, தோழர் பெருமாள் அவர்கள் மேல்மாடியில் தோழர்
ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ. அவர்களால் இளம் திராவிடர் கழகம் திறக்கப்பட்டு, கி.வீரமணி, 10 வயது தலைவராகவும், அதேபோல பெ.லெனின் 10 வயது செயலாளராகவும், மாலையில் திரவுபதி அம்மன் கோயில் திடலில் தோழர் பெருமாள் தலைமையில் தோழர் ஜனார்த்தனம் அவர்கள் அரிய சொற்பொழிவாற்றினார்.’’
இப்படி வயது இடைவெளி இல்லாமல், பெரியா ருடைய வயது என்ன? அண்ணாவினுடைய வயது என்ன? எங்களுடைய வயது என்ன? நினைத்துப் பார்க்க வேண்டும். கலைஞர் சொல்லுவார், ஈரோட்டு குருகுலத்தில் நாங்கள் எல்லாம் உட்கார்ந்து கொண்டு, மிகப்பெரிய ஒரு வாய்ப்பைப் பெற்றோம் என்று சொல்லத்தக்கச் சூழ்நிலை. அப்படி இருந்த ஓர் இடத்திலேதான், அதோடு இயக்கம் தலைகாட்ட முடியாது என்றெல்லாம் சொன்னார்கள்.
எதிர்ப்பு எழுந்த ஊரில்,
தந்தை பெரியாருக்குச் சிலை!
தந்தை பெரியாருக்குச் சிலை!
எந்த ஊரில், மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தி னார்களோ, எந்த ஊரில் கருப்புச்சட்டைப் படை வரக்கூடாது என்று நினைத்தார்களோ, இதே மதுரை தமுக்கம் மைதானத்திலேயே தந்தை பெரியாரை அழைத்து, என்னுடைய தலைமையிலே காலையில் கருத்தரங்கம். அதில் அய்யா பேசுகிறார். எந்த மதுரையிலே பெரிய அளவிற்கு இந்தக் கொள்கை வளரக்கூடாது என்று சொன்னார்களோ, அதே இடத்தில் திரும்பத் திரும்ப இந்த இயக்கம் வளர்ந்த காரணத்தினாலேதான், 30.9.1973 ஆம் ஆண்டிலே தந்தை பெரியாருடைய சிலையைத் திறந்தார்கள். அந்த சிலைத் திறப்பு விழாவின்போது தந்தை பெரியாரே வந்தார். சிலையை முதலமைச்சர் கலைஞர்தான் திறப்பதாக இருந்தது. ஆனால், அவர் திடீரென்று சட்டப்பேரவைக்குச் செல்ல விருந்ததால், நாவலர் நெடுஞ்செழியன் வந்தார். மதுரையின் முதுபெரும் சுயமரியாதை வீரரும், முன்னாள் மேயருமான முத்து அவர்கள் வந்தார். மதுரை முத்து திராவிட இயக்கத்தின் சொத்து. அவர் சுயமரியாதை வீரர் – அவருடைய தலைமையில் காலையில் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற கருத்தரங்கம். மாலையிலே பெரியார் சிலை திறப்பு விழா. இப்பொழுது சாலை அகலப்படுத்தப்பட்டதினால், அந்த சிலைதான் மாற்று இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
எங்களை விரட்டினாலும், தாக்கினாலும், எங்கள் மீது அவதூறு சொன்னாலும்,
இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது!
இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது!
1946 இல் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, 27 ஆண்டுகள் கழித்து, பெரியார் அவர்களுடைய முன்னிலையிலேயே, பெரியாருக்குச் சிலை வைக்கப்படுகிறது, இதே நகரத்தில். பெரியார் வென்றாரா, இல்லையா? எதிர்நீச்ச லில் பெரியார் வென்றார்.
ஆகவேதான், எங்களை விரட்டினாலும், எங்களைத் தாக்கினாலும், எங்கள் மீது அவதூறு சொன்னாலும், இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது. யாரெல்லாம் எதிர்த்தார்களோ, அவர்கள் எல்லாம் இந்தக் கொள்கை யின் பக்கம்தான் இருப்பார்கள் என்பதற்கு இதுவே அடையாளம்.
அய்யா அவர்கள் அதற்குப் பிறகு, மூன்று மாதம்தான் உயிரோடு இருந்தார். பெரிய எதிர்பாராத ஒரு வாய்ப்பு மதுரை தோழர்களுக்கு ஒரு பெரிய சாதனை. தேவசாயம் அவர்கள் வீர்காத்தலிங்கம் போன்றவர்கள், மற்ற நண்பர்கள் அன்றைக்கு இருந்த அத்தனை தோழர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். எவ்வளவோ தோழர்கள் – எண்ணற்ற தோழர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள். டாக்டர் கேப்டன் முத்துரங்கம் என்பவர் ஒருவர் இருந்தார். மதுரை பழனிவேல் அவர்கள் மாவட்டச் செயலாளர். அதேபோல ராமாயணச் சாவடி தெருவிலே அருமைத்தோழர் ராம இருளப்பக் கோனார் படிப்பகம் நடத்திய ரங்கசாமி அவர்கள். இவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய அளவிலே வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த ஓர் இயக்கமாக, இந்த இயக்கம் வென்றது தோழர்களே! ஆகவே, நிறைய இருக்கிறது இதை வழக்கமாக எடுத்துச் சொல்லலாம்; இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டும்.
மனுதர்ம உணர்வினால் வந்ததுதான்
நீட் தேர்வு!
நீட் தேர்வு!
ஓர் இயக்கத்தில் கொள்கை உறுதியாக இருந்தால், அதை யாரும் அசைத்துவிட முடியாது. எவ்வளவோ எதிர்ப்புகள், இன்றைக்கு –அந்த எதிர்ப்புகளை எல்லாம் தாண்டித்தான், இன்றைக்கு இதுபோன்ற திறந்தவெளி மாநாடு நடைபெறுகிறது. அதேபோலத்தான் குலக்கல்வித் திட்டம் – ஆச்சாரியாருடைய குலக் கல்வித் திட்டம் – அதைத் தந்தை பெரியார் தான் ஒழித்துக் கட்டினார். மனுதர்மத்தை எதிர்த்து நாம் ஏன் இன்றைக்குப் போராடுகிறோம்? நீட் தேர்வு எதனால் ஏற்பட்டது? மனுதர்ம உணர்வினால் ஏற்பட்டது. இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
தோழர்களே, ஒன்றியத்திலே மனுதர்ம ஆட்சி, ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, மோடி அரசு ஆட்சி, பிஜே.பி. ஆட்சி இப்பொழுது நடக்கிறது. இந்த ஆட்சியினுடைய நோக்கம் என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் வரையறுக்கப்பட்ட அந்த அரசிய லமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, மனுதர்மம் அரசியலமைப்புச் சட்டமாக வேண்டும் என்கிறார்கள். மனுதர்மம் அரசியலமைப்புச் சட்டமானால் என்னாகும்? இப்பொழுது அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே! மீறிக் கல்வியைக் கொடுத்தால், படித்தால், அவன் நாக்கை அறுக்கவேண்டும். காதால் கேட்டால், ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று சொல்லுவதுதான் மனுதர்மம்.
காரணம், பெரியார்! திராவிட இயக்கம்! சுயமரியாதை இயக்கம்!
அன்றைய காலகட்டத்தில், டாக்டர் ஆக வேண்டும் என்று சொன்னால், சமஸ்கிருதம் படித்தி ருக்கவேண்டும். அதை ரத்து செய்தது யார்? வைதீகமா? சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்களே, அந்த சரஸ்வதி ரத்து செய்துவிட்டாரா? எல்லோருக்கும் எல்லாம் வந்ததா? நம்முடைய பிள்ளைகள் டாக்டர்களாக வந்திருக்கிறார்கள் இன்றைக்கு என்று சொன்னால், அதற்குக் காரணம், பெரியார்! அதற்குக் காரணம் திராவிட இயக்கம்! சுயமரியாதை இயக்கம்! அவர் உழைக்கவில்லை என்றால், இவை நடந்திருக்குமா? பெரியாரிடமிருந்து, அவர் கொள்கையில் இருந்து ஏற்காதவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம்; அவருடைய கொள்கையை நீங்கள் ஏற்காமல் இருக்கலாம்; ஆனால், பெரியாருடைய பங்கை உங்களால் மறுக்க முடியாது. பெரியார் உங்களுக்குப் பயன்பட்டு இருக்கிறார். உங்கள் பிள்ளைகளுக்குப் பயன்பட்டு இருக்கிறார். நாளைக்கும் பயன்படுவார், அதுதான் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம்.
எப்படி இந்த நீட் தேர்வு? ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் சம்பாதிக்கிற உயர்ஜாதியினர் ஏழைகளாம். ஏழைகளில் என்னய்யா உயர்ஜாதி ஏழைகள்? எல்லா ஏழைகளையும் சொல்ல வேண்டியதுதானே! எங்கள் ஆட்களுக்குப் பயன்படக்கூடாது என்பதற்காக, நம்ம சமுதாயத்துக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படக்கூடாது என்பதற்காகத்தான் இதைக் கொண்டு வந்தார்கள். அதில் ஒரு பகுதியைச் சுருக்கமாக சொல்கிறேன்.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ இந்தப் புத்தகத்தைப் பெரியார் எழுதவில்லை; நாங்கள் எழுதவில்லை. இதை எழுதியவர் யார் தெரியுமா? அக்னிகோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார். சங்கராச்சாரியாருக்கு, சாதாரண சங்கராச்சாரி இல்லை. ஜெயிலுக்கும் – பெயிலுக்கும் போன இரண்டு சங்கராச்சாரியார்கள் இல்லை. அதற்கு முன்பு இருந்த ‘மகாமகா பெரியவா’ என்று அவர்களால் அழைக்கக் கூடியவர். அந்த சங்கராச்சாரியாருக்கு நெருக்கமான நண்பரான அவர் எழுதி, ‘நக்கீரன்’ பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் அவர் எழுதி இருக்கிற ஒரு பகுதியைப் படிக்கிறேன்.
‘‘ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். நம்மூர் மழைச்சாலையைவிட மலைச்சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்; ஆனால் மனு ஸ்மிருதியைக் கையோடு கொண்டு வந்தனர்!
நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்குத் தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது. ‘‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்…’’ ஆப்கானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது கூடவந்த பெண்கள் கம்மி. ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால் மனு ஸ்மிருதியைக் கையோடு கொண்டு வந்தனர்.’’
இதுதாங்க வரலாறு. இதுதான் திருப்பம். இதுதான் நம்முடைய அடிமைத்தனத்துக்கு முதலில் சுழி போட்ட ஒன்று. பகுதி, இந்த மனுதர்மம். மிக முக்கியமாகச் சொல்கிறார், ‘‘ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டு விட்டு வந்தார்கள். ஆனால், மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தார்கள்.
(தொடரும்)
