பெயரில்
மதச்
சேர்ப்பு
ஆலயத்தில்
முட்டிபோடல்
திருப்பதியில்
நிதிநிலை
சட்டசபையில்
ஜெபமாலை
இசுலாமியக்
கண்ணீர்
இவற்றிற்காய்
பொங்க
வேண்டியவர்கள்
பொங்காத
போதே
புரிந்து
கொள்ளுங்கள்
தமிழர்களே!
நமக்குள்
நம்மை
மோதவிட்டு
குருதி
குடிக்க
அதே
அதே
ஓநாய்கள்
தாம்
ஆயத்தமாகின்றன!
அரசியல்
கடந்து
அவசரமாய்
நாம்
ஒன்றுசேரா விட்டால்
அவ்வளவுதான்!
என்றும்
தமிழர்களே
நாம்
எழவே
இயலாது!
– பாவலர் அறிவுமதி
