கல்வி உரிமைச் சட்டம் வருமான உச்சவரம்பை நிர்ணயிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.13 ‘கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பை நிர்ணயம் செய்ய உத்தரவிட முடியாது’ எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் 25 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமான உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு மட்டும் எந்த வருமான உச்ச வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவரான ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘பட்டியலின மற்றும் பழங்குடியின குழந்தை களின் பெற்றோருக்கு வரு மான உச்சவரம்பு நிர்ணயிக்கப்படா விட்டால் பொருளா தாரத்தில் முன்னேறிய வசதியானவர்கள்கூட ஜாதி அடிப்படையில் இந்த சலுகையைப் பெற அதிக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மகாராட்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சமூக ரீதியில் பின்தங்கிய பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழ்நாட்டிலும் வருமான உச்சவரம்பை நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக கடந்தாண்டு அக்டோபரில் பள்ளிக்கல்வித் துறைக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், ‘கல்வி உரிமைச் சட்டத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனக் கூறப்படவில்லை. இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்ப தால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல’ என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என சட்டத்தில் கூறப் படாத நிலையில், அவர்களுக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என அரசுக்கு உத்தர விட முடியாது’ எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *