
தமிழ்நாடு அரசு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி மாபெரும் பேரணியை எஸ்டிபிஅய் கட்சி நடத்தியது. எஸ்டிபிஅய் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நித்தியானந்தன் எம்.எல்.ஏ. (துணைப் பொதுச் செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), முனைவர் எஸ். ஷேக்முகைதீன், (மாநில தலைவர் – சிறுபான்மை பிரிவு, பாட்டாளி மக்கள் கட்சி), கே.கே.செல்வக்குமார், (நிறுவனர் தலைவர், தமிழர் தேசம் கட்சி), நாகை திருவள்ளுவன், (தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி), வழக்குரைஞர் எஸ்.பி. சிலுவை நாடார் (தலைவர், பனை நாடார் மகாஜன சங்கம்), ஜெகத் கஸ்பர், (நிறுவனர், தமிழ் மய்யம்), Dr. மா.வெங்கடேஷ் குமார், (தேசிய தலைவர், தேசிய சமூகநீதி கட்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
