சோழிங்கநல்லூர், மே 6- சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மே மாதம் 3 அன்று மாவட்ட காப்பாளர் இரா.தே. வீரபத்ரன் முன்னிலையில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில் காலை 10.30 மணிக்கு காப்பாளர் கடவுள் மறுப்பு கூற தலைவர் வேலூர் பாண்டு அனைவரையும் வரவேற்று பெங்களூர் அம்பேத்கர் அமைப்பு கழகத்தலைவர் அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்ததையும் மாவட்டக்கழகம் சார்பில் கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததையும் விளக்கினார்.
அடுத்து மகளிரணியின் செயல்பாடுகள் வேகப்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டறிக்கை;g பிரச்சாரங்களை முன்னெடுக்கவேண்டும் என்று வேண்டிய செயலாளர் தமிழினியன், மாவட்டக் கழக வரவு செலவுக் கணக்கைப் படித்து ஒப்புதல் வாங்கினார்.
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. இறுதியில் தொழிலாளரணி மணிகண்டன் நன்றி உரையாற்றிட கூட்டம் இனிதே நிறைவுற்றது.
தீர்மானங்கள்:
தேர்தல் முடிந்த பின்னர் முதல். தெருமுனைக் கூட்டம் நமது மாவட்ட கழகத்தின் சார்பில் நடத்த வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடு களைச் உடனே செய்யத் தீர் மானிக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மகளிரணிக் கலந்துரையாடல் கூட்டம் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்திற்கு அவரவர்கள் இணையர்கள் உட்பட அனைத்து குடும்ப மகளிர்களையும் கண்டிப்பாக அழைத்துக்கொண்டு வரவேண் டும் என்றும் தீர்மானிக்கப் பட்டது.
கலந்து கொண்டோர்:
இரா தே வீரபத்திரன் காப்பாளர், வேலூர் பாண்டு மாவட்டத் தலைவர், தமிழினியன் மாவட்டச் செயலாளர், ஆர்.கலைச்செல்வன் மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன் தொழிலாளர் அணி ஜெ குமார் பகுத்தறிவாளர் கழகம், சரவணக் குமார் நிவேதன் குணசேகரன்.
