மேட்டூர் : நீர்வரத்து 2,250 கனஅடியாக சரிவு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

மேட்டூர், செப். 11- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,250 கனஅடியாக சரிந்துள்ளது.

அணைக்கு நேற்று முன்தினம்  (9.9.2026)மாலை விநாடிக்கு 3,718 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (10.9.2026) காலை 2,958 கனஅடியாகவும், மாலை 2,250 கனஅடியாகவும் சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீரும், கால்வாய் பகுதிகளின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 90.52 அடியாகவும், நீர் இருப்பு 53.24 டி.எம்.சி.யாகவும் இருந்தது. இதற்கிடையே தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்றுமுன்தினம் காலை விநாடிக்கு 5,000 கன அடியாகப் பதிவான நீர்வரத்து, நேற்று காலை 6 மணியளவில் 3,000 கனஅடியாகக் குறைந்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *