தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரியார் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விருந்து, கழக நூல் பரப்புரை, கொள்கை திருவிழாவாக கொண்டாடுவோம் மன்னார்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்

மன்னார்குடி, செப். 11- 7.9.2026 அன்று மாலை 6 மணியளவில் மன்னார்குடி தந்தை பெரியார் படிப்பகத்தில் மன்னார்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமையேற்று கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார்.

பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். அன்பழகன், அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட செயலாளர் சு.கிருட்டிணமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர் கோ.கணேசன்,  மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத், மாவட்டத் துணைத் தலைவர் ந.இன்பக் கடல், மாவட்ட துணைச் செயலாளர் புஷ்பநாதன், கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வை.கவுதமன், பகுத் தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் தங்க. வீரமணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோபால், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆட்டோ மதிரவி, மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ்ச்செல்வம், மன்னை நகரத் தலைவர் எஸ்.என்.உத்திராபதி, மன்னை  நகர செயலாளர் வே. அழகேசன், முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் ரெ.கருணாநிதி, மன்னை ஒன்றிய செயலாளர் கா.செல்வராசு, முத்துப்பேட்டை

ஒன்றிய செயலாளர் பொன்.செல்வராஜ், மன்னை ஒன்றிய துணை செயலாளர் கவிஞர் கோ.செல்வம், நீடாமங்கலம் நகர செயலாளர் கி.இராஜேந்திரன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர்  சதா.அய்யப்பன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் MP.குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இராஜேஷ் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் மா.மணிகண்டன், மாணவர் கழக மாவட்ட தலைவர் சாருக்கான், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன், திருத்துறைப்பூண்டி நகரத் துணைத் செயலாளர் ப.சம்பத்குமார், மன்னை ஒன்றிய இளைஞரணி தலைவர் பி.இளங்கோவன், மேலவாசல் குணசேகரன், எட மேலையூர் என்.இலட்சுமணன், எம்.கோவிந்தராசு, ஆர்.பாலகிருஷ்ணன், எஸ்.சேகர், வடுவூர் தன.ஆசை ஒளி, கலியமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக மு.செ.ராமலிங்கம், எம்.இசைவாணன், மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் மன்னை சித்து, து.லோகநாதன், உ.கல்யாணசுந்தரம், இரா.வணங் காமுடி, தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் வே.துரை. எடமேலையூர் ந.லெட்சு மணன், விஸ்வநாதன், ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஆசிரியர் சி.இரமேஷ், கருத்து தெரிவித்து  தீர்மானங்களை முன்மொழிந்து நன்றி கூறினார்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மன்னார்குடி கழக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். அன்பழகன், அவர்கள் தாயார் ஜெகதாம்பாள், எட மேலையூர் லெட்சுமணன், அவர்கள் மனைவியும் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், அவர்கள் மாமியார் லெ.ரூபாவதி, உள்ளிக் கோட்டை   சட்ட எரிப்பு வீரர் குமாரசாமி, மனைவி இந்திராணி, உள்ளிக்கோட்டை ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு வீரர் வெங்கடேசன், மனைவி இந்திரா, மகன் மனோகரன், பூவலூர் சந்திரசேகரன் ஆகியோர் மறைவிற்கு இக் கூட்டம் வீர வணக்கத்தையும். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறது.

உலகத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக செப்டம்பர் -17  அன்று மன்னார்குடி கழக மாவட்டத்தில். கிளைக் கழகம், ஒன்றியம்.நகரம். முழுவதும் கொடியேற்றி தந்தை பெரியார் சிலை மற்றும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்வது.

செப்டம்பர் -20 நீடாமங் கலத்தில் சமூக நீதி பயணம் “பெரியார் நடை”  (PERIYAR WALK )

செப்டம்பர் -22 கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியில் பொதுக்கூட்டம்.

செப்டம்பர் 24 திருத்துறைப் பூண்டியில் பெரியார் பட ஊர்வலம்.

செப்டம்பர் 27 மன்னார் குடியில் பெரியார் கொள்கை குடும்பங்கள் ஒன்று கூடல் (குடும்ப விருந்து)

அக்டோபர்-4 முத்துப்பேட் டையில் புத்தகம் பரப்புரை. மேற்கண்ட நிகழ்வுகள் மன்னார் குடி கழக மாவட்டத்தில் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *