அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் மாவட்டம் முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்! கடலூர் மாவட்டக் கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கடலூர், செப். 11- கடலூர் மாவட்ட திராவிடர் கழக செயல் வீரர்கள் கூட்டம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் 9.9.2026 அன்று மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கழக தலைவர் தண்டபாணி மாவட்ட கழக செயலாளர் எழில் ஏந்தி மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம் பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன் செயலாளர் குணசேகரன் அமைப்பாளர் முருகன் அண்ணா கிராமம்ஒன்றிய கழக தலைவர் கந்தசாமி குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக தலைவர் கனகராஜ் குறிஞ்சிப்பாடி நகரக் கழக தலைவர் கனகராஜ் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் தமிழேந்தி கலைச்செல்வி திராவிட மணி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தர்மலிங்கம் கம்மாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் பாவேந்தர் விரும்பி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சிவபாண்டியன் செயலாளர் லல்லு பிரசாத் குறிஞ்சிப்பாடி அறிவு பொன்னி மாவட்ட துணைத் தலைவர் மணிவேல் சேப்ளாநத்தம் வரதராசன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினர். நியூசிலாந்தில் பணிபுரியும் தோழர் பெரியார் செல்வம் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் ஆடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தந்தை பெரியார் 148 வது பிறந்தநாள் விழாவை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு சீரும் சிறப்புமாக கொண்டாடுவது கழகத் தலைவரின் அறிவுரைக்கு ஏற்ப குடும்பத்தினர் புத்தாடை உடுத்துவதும் அக்கம் பக்கத்தில் உள்ள வர் களுக்கு இனிப்புப் பெட்டகம் வழங்கவும் பெரியாருக்கான ஓட்டம் நடை இரண்டு மூன்று இடங்களில் நடத்திடவும் பெரியார் பட ஊர்வலம் பல ஊர்களில் நடத்திடவும் கழகத் தோழர்களின் வீடுகளில் கழக கொடிகளை உயர்த்திடவும் ஆக பல்வேறு சிறப்புகளுடன் அய்யா விழா விழாவை முன்னெடுப்பது என்றும்,

11.9.2026 காலை 10:30 மணி அளவில் கடலூரில் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் வகையில் நடத்துவது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன.  முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *