திருவண்ணாமலையில் செப் – 17இல் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா – பட ஊர்வலம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருவண்ணாமலை, செப். 7- 4.9.2026 அன்று மாலை திருவண்ணாமலையில் மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் மாவட்டக் கழகக் கலந்துறவாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று தலைமைச்செயற்குழு கூட்டத்தில், தமிழர்தலைவர் ஆசிரியர் தெரிவித்த அன்புக்கட்டளைகளை விளக்கியும்,  அறிவாசான் தந்தை பெரியார் 148 ஆவது பிறந்தநாள் விழாவை நன்றித் திருவிழாவாக நடத்திட வேண்டியதை விளக்கியும் செயலாக்கவுரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் போளூர் ப.அண்ணாதாசன், மாவட்ட ப.க.தலைவர் வெங்கட்ராமன், மாநகர செயலாளர் தேவராசன் செய்யாறு மாவட்ட துணைத் தலைவர் சேத்பட்டு நாகராசன் பெருஙகுளத்தூர் மு.ரெங்கநாதன், கொட்டையூர் இராசேந்திரன், பி.பழனி ஆகியோர் அடையாறு ஆனந்தபவன் இனிப்பு பெட்டி வாங்கிட பணம் அளித்து மகிழ்ந்தனர்.

18.9.2026 மாநில மாணவர்கழக துணைச்செயலாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவது,

தமிழர் தலைவர் அவர்களின் அன்புக்கட்டளைப்படி 150 இனிப்பு பெட்டி வாங்கி  உற்ற நண்பர்களுக்கு வழங்கி பெரியார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளராக கொட்டையூர் இராசேந்திரன், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய தலைவராக வழுதலங்குணம் க.துரை ஆகியோர் அறிவிக்கப்பட்டார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *