திருவரங்கம், செப். 10– திருச்சி மாவட்டம், திருவரங்கம் நகர கழகக் கலந்துரையாடல் கூட்டம் 7/9/2026 அன்று மதியம் 12.00 மணிக்கு திருவரங்கம், பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார்.
பொருள்: தந்தை பெரியார் 148வது பிறந்தநாள் மற்றும் தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்து
கலந்து கொண்டோர்
ஆ.அறிவுச்சுடர் மாணவர் கழக மாநில துணை செயலாளர், சு.மகாமணி மாவட்டச் செயலாளர், வழக்குரைஞர் அரிஹரன் விடுதலை வாசகர் வட்டச் செயலாளர், தா.ஜெயராஜன் விடுதலை வாசகர் வட்ட தலைவர், சா.கண்ணன் திருவரங்க நகர திராவிடர் கழக தலைவர், இரா.முருகன் திருவரங்கம் நகர செயலாளர், ச.திருநாவுக்கரசு, அண்ணாதுரை, இரா.மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
அய்யா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்தநாள் வெகு எழுச்சியுடன் கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது,
பெரியார் பிறந்தநாளில் திருவரங்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அனைத்து கட்சியினருடன் இணைந்து மாலை அணிவித்து இனிப்பு வழங்குவது.
திருவரங்கத்தில் உள்ள அனைத்து கோபுர வாயிலிலும் உள்ள 32 கொடிக்கம்பங்களில் கொடியேற்றி வைப்பது
பெரியார் பிறந்த நாளன்று நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளுதல்
செப்டம்பர் 11 இல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந் திரளாக கலந்து கொள்ளுதல்.
செப்டம்பர் 20 இல் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வர்கள் கலந்து கொள்ளும் சமூக நீதி நடைபயணத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள தீர்மானிக்கப்படுகிறது.
அனைத்துப் பகுதிகளிலும் கொடியேற்றி வைத்த பிறகு எப்பொழுதும் போல் திருவரங்கம் பெரியார் படிப்பகத்தில்அன்று மதியம் விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் அரிஹரன், தோழர்கள் அனைவருக்கும் புலால் உணவு வழங்குகிறார்கள். முடிவாக நகரத் தலைவர் கண்ணன் நன்றி கூறி முடித்து வைத்தனர்.
