- ‘விடுதலை’யில் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் பரப்புரை செய்வதற்கான காவல்துறை அனுமதியை பெற வேண்டும்.
- தங்கள் மாவட்டத்தில் பரப்புரைப் பயணக் குழு வருகை தரும் வழித்தடத்தை குறிப்பிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தகவல் கடிதம் ஒன்று கொடுத்திட வேண்டும்.
- இரவு தங்கும் இடங்களில் 30 முதல் 40 நபர்கள் தங்குவதற்கான உரிய ஏற்பாடுகளையும் இரவு உணவு மற்றும் காலை உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- தங்கள் மாவட்ட எல்லையில் வரவேற்று, அடுத்த மாவட்டம்எல்லை வரை பரப்புரைக் குழுவினரோடு குறைந்தது 10 வாகனங்களுடன் செல்ல வேண்டும்.
- ஒத்த கருத்துள்ள அமைப்புகளை சேர்ந்த பொறுப் பாளர்களுக்கு தகவல் தெரிவித்து பரப்புரைக் குழுவினருக்கு வரவேற்புக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பரப்புரைக் குழு வந்தவுடன் குழுவில் இடம் பெற்றுள்ள பேச்சாளர் பேசுவதற்கு உடனடியாக வாய்ப்பளிக்க வேண்டும்.
- வாகன பரப்புரைப் பயணம் குறித்தான செய்தியை பிளக்ஸ் மற்றும் துண்டறிக்கை விளம்பரங்களை முன்கூட்டியே செய்திட வேண்டும். கழகக் கொடிகளை ஏராளமாகக் கட்டிட வேண்டும்.
- உள்ளூர் அச்சு, மின்னணு ஊடக செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்து நிகழ்ச்சியைஅவர்கள் ஊடகங்களில் இடம்பெறச் செய்ய ஆவணம் செய்ய வேண்டும்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
