மிசாவில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதா? தி.மு.க. கடும் விமர்சனம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 9- ‘மிசாவில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதலமைச்சர் விஜய் கொச்சைப்படுத்துகிறார்’ என்று திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் விமர்சித் துள்ளனர்.

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்று  (8.9.2026) வெளியேற்றப் பட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திமுக கொறடா எ.வ.வேலு கூறியதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 116 நாட்களில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள் என மொத்தம் 550 குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சட்டப் பேரவையில் புள்ளிவிவரங்களுடன் ஆதாரங்களை முன்வைத்தார்.

இதற்கு முதலமைச்சர் உரிய முறையில் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இதுகுறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சட்டப்பேரவை விதி 92இன்படி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை சபையில் விவாதிக்கக் கூடாது.

ஆனால், முதலமைச்சர் அதனை மீறி அமலாக்கத்துறை தொடர்பான பிரமாணப் பத்திரத்தை வாசித்தார். மேலும், ‘மிசா’ போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உடல் அசைவுகளைச் செய்து நடித்தார்.

‘மிசா’ கைது பற்றி பேசி எங்கள் தலைவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தி உள்ளார். அதே போல், நிரூபிக்கப்படாமல் கைவிடப்பட்ட சர்க்காரியா கமிஷன் விவகாரத்தை மீண்டும் முதலமைச்சர் கிளப்பியுள்ளார்.

முரசொலி மாறனின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் பேசியது கண்டிக்கத்தக்கது. மாறனின் குடும்பத்திடம் பணம் வாங்கிக்கொண்டு திரைப்படத்தில் நடித்தவர் விஜய்.

புதுடில்லியில் மாறனின் தபால் தலையை வெளியிட்ட அதே விஜய், இன்று அவரை இழிவுபடுத்துவது ஏன்? முதலமைச்சர் பேசிய அவதூறான கருத்துகளையும், விதிமீறல்களையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால், அவர் மறுத்துவிட்டார். மாறாக, காவல்துறையை ஏவி எங்களை நியாயமற்ற முறையில் வெளியேற்றினார்கள். இது சர்வாதி காரத்தின் உச்சம். திமுகவின் ‘திராவிட மாடல்’ என்பது ரியல் ஆட்சி. ஆனால் தற்போது நடப்பது வெறும் ‘ரீல்’ ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, ‘‘திமுக மீது பழி சுமத்துவதைத் தவிர அவர்களுக்குப் பேசுவதற்கு புதிய விசயங்கள் ஏதும் இல்லை. அதனால் தான் காலாவதியான பழைய சர்க்காரியாகமிஷன் போன்ற விவகாரங்களை எடுத்துப் பேசுகிறார்கள்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *