உடுமலைப்பேட்டை, செப். 10- தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விருந்து, கொள்கை திருவிழாவாக கொண்டாடுவது தாராபுரம், பொள்ளாச்சி, கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
07-09-2026 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு உடுமலைப் பேட்டை குள்ளம்பற்றை தமுமுக மாவட்ட அலுவலகத்தில். தாரா புரம், பொள்ளாச்சி, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து ரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமையேற்று கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார்.
மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, தாராபுரம் மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன், மாவட்ட செயலா ளர் ஜெ.தம்பி.பிரபாகரன், பொள் ளாச்சி மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் அ.இரவிச்சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
தாராபுரம் கழக மாவட்டம்
மாவட்டக் காப்பாளர் கே.என்.புள்ளியான், பொதுக் குழு உறுப்பினர்கள் நா.சக்திவேல், கி.மயில்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் நா.மாயவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பு.முருகேசு, தாராபுரம் நகரத் தலைவர் இரா.சின்னப்பதாசு, மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் மா.தங்கவேல், காரத்தொகு அமைப்பாளர் த.நாகராசன், கணியூர் மா.ராம சாமி, இளைஞரணி தமிழ் நில வன், கு.கண்ணன்,
பொள்ளாச்சி மாவட்ட துணைத் தலைவர் சு.ஆனந்தசாமி, பொதுக் குழு உறுப்பினர் ஜெ.செழியன், மாவட்ட இளைஞ ரணித் தலைவர் கார்த்திக், ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
உடுமலை நகரச் செயலாளர் முருகேசன் கருத்து தெரிவித்து நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
செப்டம்பர் -3 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், பங்கேற்புடன் பெரியார் கொள்கை குடும்பங்களின் ஒன்று கூடல் (குடும்ப விருந்து) தாராபுரம் பொள்ளாச்சி கழக மாவட்ட அளவில் செப்டம்பர் -27 ஞாயிற்றுக்கிழமை அன்று மிக சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
