இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

1 Min Read

05.07.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் தமிழ்த் தேசியப் பேரவைத் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கனகரட்னம் சுகாஷ், தர்மலிங்கம் சுரேஷ், நடராஜர் காண்டீபன், பொன்னுத்துரை அய்ங்கரநேசன், தவராசா உள்ளிட்ட தமிழர் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் சந்தித்தனர். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படாமல் இருக்க செய்யப்பட வேண்டிவை குறித்துத் தமிழர் தலைவரிடம் எடுத்துரைத்தனர். உடன்: திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *