விஞ்ஞானி ‘பாரத ரத்னா’ சி.என்.ஆர். ராவுக்கு வினோதமான கேள்வியுடன் தேர்தல் ஆணையம் அழைப்பாணை!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெங்களூரு, செப்.10 கருநாடகத் தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பட்டியலில் (SIR) பெயர் தொடர்பான முரண்பாடு குறித்து விளக்கமளிக்க, பாரத ரத்னா விருது பெற்ற 92 வயது மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத் துள்ளது.

கருநாடக மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்.அய்.ஆர்.) நடைபெற்று வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 17 அன்று வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதனிடையே, வாக்காளர் வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் தகவல்களில் தவறு இருப் பவர்கள் அதனைத் திருத்தி மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவின் பெயர், கடந்த 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் புரோஃப் சிஎன்ஆர் ராவ் (“Prof CNR Rao”) என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பட்டியலில் “f” என்ற எழுத்து கூடுதலாகச் சேர்க்கப் பட்டு “Proff CNR Rao” என்று இடம்பெற்றுள்ளது. இந்த எழுத்துப் பிழை அல்லது முரண்பாடு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சி.என்.ஆர். ராவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

எஸ்.அய்.ஆர். நடைமுறையின்படி குறிப்பிட்ட நபர் மட்டுமே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்பதால், இந்திய அறிவியல் கழகத்திற்கு அருகிலுள்ள மல்லேஸ்வரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ஆஜராக அவருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. 92 வயதான மூத்த விஞ்ஞானிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பாணை விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் இந்திய தேர்தல் ஆணையத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை சி.என்.ஆர். ராவ் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *