திருநெல்வேலி, செப். 9- பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலியில் கடந்த 2022ஆம் ஆண்டு பிளஸ் டூ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முனீஸ்வரர், சின்ன குட்டி, முருகேசன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு அறிவித்தது.
தூக்கு தண்டனை: குற்றவாளி சின்ன குட்டிக்கு தூக்குத் தண்டனையும், முருகேசனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து நெல்லை போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
