பல்கலைக்கழக பிரச்சினைகள்: ஆளுநரை அணுக வேண்டிய அவசியம் இல்லை துணைவேந்தர்களுக்கு அமைச்சர் க.பொன்முடி அறிவுறுத்தல்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசு, தமிழ்நாடு

சென்னை ஜூலை 22-  பல் கலைக்கழக பணிகள் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று துணைவேந்தர்களிடம் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். 

அண்ணா பல்கலை. பதிவாளராக (பொறுப்பு) இருந்த ஜி.ரவிக்குமார் மாற்றப்பட்டு, எம்.அய்.டி கல்லூரியின் முதல்வராக உள்ள ஜெ.பிரகாஷ் அந்த இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளு நரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றத்தை துணைவேந் தர் ஆர்.வேல்ராஜ் மேற் கொண்டதாகக் கூறப்படு கிறது. இந்த விவகாரம் துணைவேந்தர்கள் ஆலோசனைக்கூட் டத்தில் பெரிய அளவில் வெடித்தது. இக்கூட்டத் தில் துணைவேந்தர் வேல்ராஜ் பேசியதற்கு அமைச்சர் க.பொன்முடி மிகவும் கோபமாகவே பதிலளித்தார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘ஒரு கல்லூரியின் முதல்வராக இருப்பவரை பொறுப்பு பதிவாளராக ஏன் நிய மிக்க வேண்டும்? எதன் அடிப்படையில் இந்த நியமனத்தை செய்தீர்கள்? இனி இத்தகைய நிகழ்வு கள் நடக்கக் கூடாது. இனி அனைத்து பல்க லைக் கழகங்களிலும் பதி வாளர், தேர்வுக் கட்டுப் பாட்டு அலுவலர்களை தனிக்குழு அமைத்து அதன் மூலமே தேர்வு செய்ய வேண்டும்’’ என்றார். 

அதேபோல் துணை வேந்தரின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் க. பொன்முடி, ‘‘வருமானம் வரும் கல்லூரிகளை அண்ணா பல்கலை.யே வைத்துக் கொள்ளும். வருமானமற்ற கல்லூரி களை நாங்கள் ஏற்க வேண்டுமா? வேண்டுமா னால் உறுப்புக் கல்லூரி களுடன், எம்அய்டி, ஏசி டெக் போன்ற அண்ணா பல்கலை. வளாகக் கல்லூ ரிகளையும் சேர்த்து எடுத்துகொள்கிறோம். அண்ணா பல்கலை.யில் காலிப் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ என்று காட்டமாக பதில ளித்தார். 

மேலும், ‘‘பல்கலை. பணிகளை ஆளுநரிடம் கேட்டுதான் துணைவேந் தர்கள் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. பட்டமளிப்பு விழாவுக் கான தேதியை மட்டுமே ஆளுநரிடம் கேட்க வேண் டும். சிறப்பு விருந்தினர் யார் என்பதை துணை வேந்தர்களே முடிவு செய்யலாம். அதேபோல், யுஜிசி வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்று வது கட்டாயமில்லை. நமது மாநிலத்தில் என்ன சூழல் நிலவுகிறதோ அதற் கேற்பதான் செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *