அமராவதி, மே 4: திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய் கொள்முதல் நடைமுறையில் கடுமையான விதி மீறல்கள் மற்றும் தரக் கண்காணிப்பு குறைபாடுகள் இடம் பெற்றுள்ளதாக ஆந்திர மாநில அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் தேவையான உபகரணங்கள் இல்லாததால் நேரடி தரச்சோதனைகள் தாமதமாக நடத்தப்பட் டன. மேலும், புகார்கள் மற்றும் தரக் கண்காணிப்பு அமைப்புகள்பெரும் அளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தவறு களுக்கு திருப்பதி தேவஸ்தா னம், கொள்முதல் குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளே பொறுப்பேர்க்க வேண்டும் என்று அறிக்கையில் தெரி விக்கப்பட்டது.
