மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் “Dr” (டாக்டர்) என்றும், பேராசிரியர்கள் “Prof” (புரொஃபசர்) என்றும் பயன்படுத்துவதைப் போல, கருநாடகாவில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் “Tr” (Teacher) என்று பயன் படுத்திக் கொள்ளலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர்களின் சேவையைக் சிறப்பு செய்யும் வகையிலும், சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கருநாடக அமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் இந்த “Tr” (டீச்சர்) என்ற முன்னொட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆசிரியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இத்தகைய முன்னொட்டு அறிமுகப்படுத்தப் படுவது இதுவே முதல்முறையாகும்.
