ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கோரி தனி நபர் தீர்மானம்! பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தார்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப் 08- குறை பாடுகளற்ற ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்தி தனிநபர் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து சட்டப் பேரவைத் தலைவரிடம் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார்.

குறைபாடுகளுக்கு இடம் தராமல் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்றும், இதர பிறபடுத்தப்பட்ட மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்து தனிநபர் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து சட்டப் பேரவைத் தலைவரிடம் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (7.9.2026) கடிதம் அளித்துள்ளார்.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நோக்கமே பட்டியலினச் சமூக மக்களின் எண்ணிக்கையைப் போல, ஓபிசி மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவர் களது கல்வி, சமுதாய, பொரு ளாதார நிலைமையையும் அறிந்து கொள்வதுதான் என்பதால் ஒன்றிய, மாநில அரசுகளின் ஓபிசி ஜாதிகளின் பட்டியலை வைத்து, அதிலிருந்து மக்கள் ஜாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றி னால்தான் ஜாதிவாரிப் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *