பீகாரில் போராடிய மாணவர்கள்மீது துப்பாக்கியை பயன்படுத்தியதற்கு ராகுல் காந்தி கண்டனம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப்.7- பீகாரில் நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கடந்த ஜூலை 25-ஆம் தேதி பந்த் நடைபெற்றது.

சிவான் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது, காவல் துறையினர் நடத்திய துப் பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாணவர்கள், கடந்த வியாழக் கிழமை (3.9.2026) டில்லி சென்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத் தில் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பான படங்கள் மற்றும் காட்சிப் பதிவை தனது சமூக வலைதளத்தில் ராகுல் பகிர்ந்துள்ளார். இதனுடன் வெளியிட்ட பதிவில், “காவல் துறையினர் ஏகே-47 துப்பாக்கியால் சுட்டதில், ஒரு மாணவரின் கால் எலும்பு முறிந்து அவரது ராணுவக் கனவு பாழானது. மற்ற இரு மாணவர் களின் தோள்களில் தோட்டாக்கள் பாய்ந்தன. தங்களின் எதிர்காலமே சீரழிந்துவிட்டதாக அம்மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

அவர்களின் உளவியல் அதிர்ச் சிக்கும் நொறுங்கிய கனவுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடியும், பீகார் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரியும் பதில் சொல்வார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். நியாயமான கோரிக்கைகளைக் கேட்கும் மாண வர்கள் மீது “லத்தியும் தோட்டாவும்” பயன்படுத்தியதற்குக் கண்டனம் தெரிவித்து, சுயாதீன விசாரணை நடத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *