ஒன்றிய ஆயுத காவல் படைகளில் அய்.பி.எஸ். அதிகாரிகளுக்கு அதிக வாய்ப்பு ஒன்றிய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 3,000 அதிகாரிகள் மனு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.2 ஓன்றிய ஆயுத காவல் படைகளில் அய்.பி.எஸ்.  அதிகாரிகளின் பணி நியமனத்தைக் குறைத்து, அந்தந்தப் படைகளின் சொந்த (கேடர் அதிகாரிகள்) பணி அதிகாரிகளுக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

எனினும், நீதிமன்றத்தின் இத்தீர்ப்பிற்கு மாறாக, அய்.பி.எஸ். அதிகாரிகளுக்கான இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக்கும் வகையில் ஒன்றிய அரசு புதிய ‘சிஆர்பிஎப் பொது நிர்வாகச் சட்டத்தை’ இயற்றியுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சுமார் 3,000 பணியிலுள்ள அதிகாரிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட அனுமதிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 32-இன் (Article 32) கீழ் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு அடுத்த சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *