தமிழ்நாட்டின் பல்வேறு நூலகங்களுக்கு 6500 புத்தகம் வழங்கிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.06 திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பரி சளிக்கப்பட்ட புத்தகங்களில் 6,500 புத்தகங்கள் மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மற்றும் கிராமப்புற நூலகங்களுக்கு நேற்று (5.9.2026) வழங்கப்பட்டன. இதன் மூலம், தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த நூல்களில் இதுவரை மொத்தம் 6.5 லட்சம் புத்தகங்களை நூலகங்களுக்கு அவர் வழங்கி யுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தவர்கள், அவருக்கு அளித்த புத்தகங்களை, தங்கள் கல்லூரி மற்றும் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்க கோரிக்கை வைத்தனர். அதை மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டு மதுரை, கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரிக்கு 1,000 புத்தகங்கள், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரமகேந்திர கோட்டை புரட்சியாளர் அம்பேத் கர் படிப்பகத்திற்கு 1,000 புத்தகங்கள், கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியம், தந்தை பெரியார் திராவி டர் நூலகத்துக்கு 500 புத்தகங்கள், தர்மபுரி மாவட்ட வழக்குரைஞர் அணிக்கு 2,000 புத்தகங்கள், வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய நூலகத்துக்கு 1,000 புத்தகங்கள், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மேல்வசலை கிராமம் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகத்துக்கு 1,000 புத்தகங்கள் என மொத்தம் 6,500 புத்தகங்களை நேற்று அண்ணா அறிவாலயத்தில் அந்தந்த நூலக நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இதுவரை 6.5 லட்சம் புத்தகங்கள்:

தனக்கு வரப்பெற்ற புத்தகங் களில் இதுவரை 6.5 லட்சம் புத் தகங்களை பல்வேறு நூலகங் களுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கி யுள்ளார். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *