புதுடில்லி, செப்.5 டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் போராட் டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் நிகழ்வு மிகுந்த கவலையளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித் துள்ளார்.
புதுடில்லியில் நேற்று (4.9.2026) நடைபெற்ற முன்னாள் பாதுகாப்புத் துறை செயலர் யஷ்வர்தன் ஆசாத் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கலந்துகொண்டார்.
“டில்லி ஜந்தர் மந்தரில் அமைதி யான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களை காவல்துறை யினர் தாக்கிய சம்பவம் எனக்கு மிகுந்த மனவேதனையையும் கவ லையையும் அளிக்கிறது. குறிப்பாக, போராட்டக்காரர்களைத் தாக்கும் வகையில் இளம் அய்பிஎஸ் அதிகாரிகளே நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்படுவது மிகவும் வருந்தத்தக்கது. காவல் துறையினரிடம் பொதுமக்கள் எதிர்பார்க்கும் நடுநிலைத் தன்மை யும் நேர்மையும் தற்போது குறைந்து வருவது தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டிய கவலைக்குரிய விசய மாகும்.”
இவ்வாறு நீதிபதி உஜ்ஜல் புயான் தனது பேச்சில் சுட்டிக்காட் டினார். காவல்துறையின் நட வடிக்கை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரே பகிரங்கமாகக் கவலை தெரிவித்துள்ளது பொது மக்களிடையேயும் வழக்குரைஞர் களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
