ரூ.8,000 கோடிக்கு வெளிநாட்டு பயணம்: காங்., விமர்சனம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவிக்கு பாக்., நியமிக்கப்பட்டதில் இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு ஏற்பட் டுள்ளதாக காங்., சேர்ந்த ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். பாக்.,-க்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் தடுப்பதில் பிரதமர் தோல்வியடைந்து விட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.8,000 கோடிக்கு பயணம் செய்து, எந்த நாட்டின் ஆதரவை பிரதமர் பெற்றார்? எனவும் கேள்வி எழுப்பினார்.

50 ஆபாச காட்சிப் பதிவுகள் : சிக்கிய இந்து அமைப்பு நிர்வாகி

கருநாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா சம்பவத்தை போல் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்து அமைப்பு நிர்வாகி சமித் ராஜூவின் கைப்பேசியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச காட்சிப் பதிவுகளை கைப்பற்றி காவல்துறையினர்  விசாரித்து வருகிறது. அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *