கோயம்புத்தூர், செப். 5- சுசுகி இன்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ZEN கராத்தே ஸ்கூல் ஆப் இந்தியா சார்பாக 23.08.2026 மற்றும் 24.08.2026 ஆகிய இரு நாட்கள் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்த கராத்தே போட்டியில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து கராத்தே வீரர்கள், வீராங்கனைகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு எம்.ஜெகத்ரட்சகன – I/Mech, பங்கு பெற்று சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கம் வென்றார். பதக்கத்துடன் வந்த எம்.ஜெகத்ரட்சகன்-I/Mech. அவர்களை இக்கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி, துணை முதல்வர் முனைவர் க.ரோஜா, உடற்கல்வி இயக்குநர் முனைவர் இரா.கோ.கிரிதரபிரசாத்தும், அனைத்து துறைத் தலைவர்களும் மற்றும் பேராசிரியர்களும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் கராத்தே போட்டியில் சாதனை!
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
