நடைபாதை ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது! டில்லி உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாட்டின் பிற சட்டவிரோதக் கோயில்களுக்கும் பொருந்தும்!

புதுடில்லி, செப்.4 டில்லியில் லோஹர் பஸ்தி உள்ளிட்டப் பகுதி களில் பொது இடங்களையும், நடை பாதைகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த குடிசைகள் மற்றும் கடைகளைப் பொதுப்பணித்துறையும், மாநகராட்சியும் இணைந்து இடித்து அகற்றின. இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வு, ‘‘நடைபாதையில் கடைகளையோ, குடிசைகளையோ கட்டுவது சட்டவிரோதம். இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. அவற்றை இடிப்பதற்கு எந்தத் தடையும் விதிக்க முடியாது’’ எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

இந்த உத்தரவு, டில்லிக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சாலையோரங்களில் கணக்கின்றி முளைத்துவரும் சட்டவிரோத வழி பாட்டுத் தலங்களுக்கும் பொருந்துமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

பொது இடங்களில் திடீரென முளைக்கும் கோயில்கள்

டில்லி உள்பட நாட்டின் பல பெரு நகரங்களிலும், சிறிய ஊர்களிலும் சாலை ஓரங்களிலும், நடைபாதைகளிலும் ‘சாயிபாபா கோயில்’, ‘விநாயகர் கோயில்’ எனச் சிறிய அளவில் வழிபாட்டுத் தலங்கள் திடீரென அமைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் சிறிய சிலையாகத் தொடங்கும் இவை, சில ஆண்டுகளிலேயே அப்பகுதியின் போக்குவரத்திற்கும், பொதுமக்களின் நட மாட்டத்திற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய கோயில்களாக உருவெடுக்கின்றன.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நேரடியாக ஆக்கிரமிப்புக் கடைகள் மற்றும் குடிசைகளுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டதாக இருந்தாலும், ‘‘பொது இடம் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது’’ என்ற அடிப்படையான சட்ட விதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு

பொது இடங்கள், சாலைகள் மற்றும் நடைபாதைகளில் புதிய வழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்றும், ஏற்கெனவே ஆக்கி ரமித்துக் கட்டப்பட்டுள்ள சட்ட விரோதக் கோயில்கள், மசூதிகள் அல்லது சர்ச்சுகளை அகற்றுவது அல்லது இடமாற்றம் செய்வது மாநில அரசுகளின் கடமை என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பலமுறை தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு என்பது குடிசையாக இருந்தாலும், கடையாக இருந்தாலும் அல்லது ஆன்மிகப் போர்வையில் கட்டப்பட்ட கோயிலாக இருந்தா லும் அது சட்டத்தின் முன் ஆக்கிர மிப்பையே குறிக்கும். டில்லி உயர்நீதிமன்றத்தின் இப்போதைய உத்தரவும், உச்சநீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்களும் சாலை ஆக்கிரமிப்புகளுக்கு எதி ரான உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு சட்டப்பூர்வ பலத்தைச் சேர்க்கின்றன. அரசு களும், மாநகராட்சிகளும் உரிய முறையில் நடவடிக்கை எடுத்தால், பொதுமக்களுக்கு இடையூறாகச் சாலைகளில் திடீரென முளைக்கும் கோயில்கள் மற்றும் பிற ஆக்கிர மிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதே உண்மை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *