டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ‘காவிரி நதிநீர் விவகாரத்தில் கருநாடகாவுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனியாகப் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது’ என்று விவசாய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.
* இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். பாமகவை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார், பாமக நிறுவனர் ராமதாஸ்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மாணவர் போராட்டத்துக்கு பணிந்தது ஒன்றிய அரசு – தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்; நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
* டில்லியில் போராட்டத்தை திரும்பப் பெற்றது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!!
* தேர்வு முறைகேடு தடுப்புச் சட்டம்: நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
* மாணவர்கள் மீது மேலும் வன்முறை நடத்தப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, உண்ணா நிலையை முடித்துக் கொண்டதாக சோனம் வாங்சுக் தெரிவித்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தர்மேந்திர பிரதான் பதவி விலகலால் உற்சாகமடைந்த எதிர்க்கட்சிகள் – “இளைஞர் சக்தி, ஜனநாயகத்தின் வெற்றி” என வரவேற்பு. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை தொடர்ந்து, இளைஞர்களின் போராட்டம் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றியாக எதிர்க்கட்சிகள் இதை வரவேற்றுள்ளன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* டில்லி பயணத்தால் பரபரப்பு – ஒன்றிய கல்வி அமைச்சர் பதவிக்கு பட்னாவிஸ்? மகாராட்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் டில்லி பயணம் அரசியல் ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி அமைச்சரவையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வருவதாக சிவசேனா (உத்தவ்) தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
தி இந்து:
* அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப் பையே ஆர்.எஸ்.எஸ். – பாஜக குறிவைக்கின்றன” – என். ராம் குற்றச்சாட்டு.
* “தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடக்கம் மட்டுமே; நீட் ஒழிப்பே எங்கள் இலக்கு” – போராட்டக்காரர்கள். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிய பின்னரும், சென்னை சி.பி.அய். மாநில அலுவலகத்தில் போராட்டம் தொடர்ந்தது. பிரதானின் பதவி விலகிய முதல் வெற்றியே தவிர, நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பதே தங்களின் இறுதி இலக்கு என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தி டெலிகிராப்:
* “நாங்கள் உங்கள் நண்பர்கள் அல்ல” – பிரதமரின் சமூக ஊடகப் பதிவுக்கு ஜென் இசட் தலைமுறையின் பதிலடி. பிரதமர் மோடியின் சமூக ஊடக காட்சிப் பதிவுக்கு ஜென் இசட் தலைமுறையினர் கடுமையாக பதிலளித்துள்ளனர். காட்சிப்பதிவு நேரம், காட்சியமைப்பு மற்றும் “நண்பர்களே” என்ற தொடக்க உரையை கேலி செய்து, சமூக ஊடகங்களில் விமர்சனப் பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இளைஞர் போராட்டம் முடிந்ததால் அயோத்தி ராமன் கோயில் நன்கொடை மோசடியை முன்வைத்து அரசை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டம்.
– குடந்தை கருணா
