புதுடில்லி, செப்.4- நெடுஞ் சாலைகளில் அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. சுங்கச் சாவடி களில் ஏன் கண்காணிப்புக் கேம ராக்களை பொருத்தக்கூடாது என்று நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி விடுத்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பாலோடி பகுதியில், சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் ஒரு வேன் மோதியது. அதில், 15 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விசாரணையின்போது, சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது. தேசிய நெடுஞ்சாலை யோரம், எந்த கனரக மற்றும் வர்த்தக வாகனங்களையும் நிறுத்தக்கூடாது, புதிதாக உணவகம் அமைக்கக்கூடாது என் உத்தரவிட்டது. விபத்து பகுதிகளை அடையாளம் கண்டு, பட்டியலிடுமாறு ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகத்தை கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், நேற்று (3.9.2026) இந்த வழக்கு, உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் நர்கனி, “நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதுதான் பெரும் பிரச்சினை, அதுதான் விபத்துக்கு வழிவகுக்கிறது” என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள், “நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளும், அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவதும் தனித்தனியான இருபெரும் பிரச் சினைகள்” என்று கூறினர்.
அப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதை தடுக்க ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மாறு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளோம்” என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள், “இதை தடுக்க கண்காணிப்பு கேமரா முறையை ஏன் நீங்கள் சிந்திக் கக்கூடாது? அனைத்து சுங் கச்சாவடிகளிலும் நீங்கள் கண் காணிப்பு அறைகள் அமைக் கலாம்” என்று தெரிவித்தனர்.
மேலும், தங்களது முந்தைய இடைக்கால உத்தரவுகளுக்கு கீழ்ப்படிவதாக ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம், ஒன்றிய உள்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு ஆகியவை இன்னும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினர் நீதிபதிகள்.
அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 6ஆம்தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதற்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
சுங்கச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களை ஏன் பொருத்தக் கூடாது? உச்சநீதிமன்றம் கேள்வி
Leave a Comment
