‘தொல்குடி தொடுவானம்’ திட்டத்தில் 16 பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசு தகவல்

2 Min Read

சென்னை, ஜூன் 20- தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனம் இணைந்து ‘தொல்குடி தொடுவானம்’ திட்டத்தின் கீழ் 16 பழங்குடியின இளைஞர்களுக்கு”கனரக மோட்டார் வாகன” ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமத்துடன் பொது வில்லை வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்புகளை பழங்குடியின இளைஞர்கள் பெறும் வகையில், இந்த தொழிற்பயிற்சி வடிவமைக்கப்பட்டது. 67 நாள் பயிற்சியில், கனரக வாகனங்களை இயக்குதல், சாலைப் பாதுகாப்பு விதிகள், வாகன பராமரிப்பு, பயணிகளை அணுகும் முறைகள் மற்றும் தொழில்முறை ஓட்டுநர் பயிற்சிகள் குறித்து விரிவான மற்றும் நடைமுறை விளக்கங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சியின் வெற்றியாக, 16 பழங்குடியின இளைஞர்களும் பயிற்சி முடித்தவுடனேயே 100 விழுக்காடு (100%) நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்து பிரிவிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட போக்குவரத்து பணிமனைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனம் இணைந்து ‘தொல்குடி தொடுவானம்’ திட்டத்தின் கீழ் 16 பழங்குடியின இளைஞர்களுக்கு”கனரக மோட்டார் வாகன” ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமத்துடன் பொது வில்லை வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்புகளை பழங்குடியின இளைஞர்கள் பெறும் வகையில், இந்த தொழிற்பயிற்சி வடிவமைக்கப்பட்டது. 67 நாள் பயிற்சியில், கனரக வாகனங்களை இயக்குதல், சாலைப் பாதுகாப்பு விதிகள், வாகன பராமரிப்பு, பயணிகளை அணுகும் முறைகள் மற்றும் தொழில்முறை ஓட்டுநர் பயிற்சிகள் குறித்து விரிவான மற்றும் நடைமுறை விளக்கங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சியின் வெற்றியாக, 16 பழங்குடியின இளைஞர்களும் பயிற்சி முடித்தவுடனேயே 100 விழுக்காடு (100%) நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்து பிரிவிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட போக்குவரத்து பணிமனைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *