மின்வாரியம் தனியார் மயமாகிறதா? முதலமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி மின் ஊழியர் மத்திய அமைப்பு கடும் கண்டனம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 4-  மின் வாரியத்தை தனி யாருக்கு தாரைவார்க்கும் கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாட்டை தவெக அரசு எடுத்துள்ளதாக மின் ஊழியர் மத்திய அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரூ.20,800 கோடி

தூத்துக்குடியில் தற்போதுள்ள 5×210 மெகாவாட் மின் நிலையத்தை மாற்றிவிட்டு, அங்கு 2×800 மெகாவாட் மின்திறன் கொண்ட சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையத்தை ரூ.20,800 கோடி முதலீட் டில் பொது மற்றும் தனி யார் பங்களிப்புடன் (PPP) துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மின்சார வாரியம் தனியார் மயம் ஆவதை நோக்கி வேகமாகச் செல்கிறது என்பதை உணர்த்துவதாக தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் தி.ஜெய சங்கர் கூறியுள்ளார்.

 எண்ணூர் அனல்மின் நிலையங்கள்

இதேபோல் எண்ணூர் அனல்மின் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக் கும் முதலமைச்சரின் அறிவிப்புக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தனியா ரிடம் வழங்கும் தவெக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மின் வாரியத்தில் 10,000 பேரை 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே எடுப்பதா எனக் கேள்வி எழுப்பியுள்ள தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் தி.ஜெயசங்கர், புதிய புனல் மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களையும் தனியாருக்கு விற்கும் தவெக அரசின் நிர்வாக திறமையின்மை அம்பலமாகியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *