மகள்கள் கல்விச் செலவுகளுக்காக வெறுங்கால்களுடன் மாரத்தான் ஓடி வென்ற பெண்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மும்பை, செப்.3 மகாராட்டிரத்தில் தனது மகள்களின் படிப்புச் செலவுக்காகத் தாய் ஒருவர் மாரத்தான் போட்டியில் வெறுங்கால்களுடன் ஓடி முதல் பரிசை வென்றது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

மகாராட்டிரத்தின் பீட் மாவட்டம் அம்பஜோகாய் பகுதியைச் சேர்ந்தவர் ரமாபாய் ரன்வீர் (47). கடும் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், தனது இரண்டு மகள்களுக்கும் நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார. இதற்காக அங்குள்ள ஒரு தனியார் பயிற்சி மய்யத்தில் சமையல் வேலை செய்து தனது குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் அமைப்பு ஒன்று மாரத்தான் போட்டி ஒன்றை அறிவித்தது. பல இளம் பெண்கள் டி-ஷர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்து பங்கேற்ற நிலையில், ரமாபாய் தான் வழக்கமாக அணியும் சேலையுடன் போட்டியில் கலந்துகொண்டார்.

பனிமூட்டம் அதிகம் இருந்த நிலையிலும், கற்கள் நிறைந்த பாதையிலும் அவர் செருப்பின்றி வெறுங்கால்களுடன் ஓடினார். போட்டியில் பல இள வயது போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் ஆளாக ஓட்டத்தை நிறைவு செய்து முதல் பரிசை வென்றார்.

இப்போட்டியில் வெறும் ரூ. 3,000 மட்டுமே பரிசுத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்குப் பிறகு பேசிய அவர், தன்னுடைய மகள்களுக்குப் புத்தகம் வாங்க இந்தத் தொகை உதவும் என்று கூறினார். மேலும், இவருடைய மகள் பூஜாவும் இந்தப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தார். மகள்களின் படிப்புக்காகத் தாய் ஒருவர் மாரத்தான் போட்டியில் ஓடி வெற்றி பெற்ற இந்த நெகிழ்ச்சிச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவதுடன், பலரின் பாராட்டுகளையும்  பெற்று வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *