செப்.15-ஆம் தேதி முதல் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று முதலமைச்சர் அறிவிப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 03- டிஜிட்டல் முறையிலான ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் ஆகியவை செப்.15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று (2.9.2026) 110-ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் தற்போது ஓட்டுநர் உரிமம் மற் றும் வாகன பதிவுச் சான்று பெறுவதற்கு கட்ட ணமாக ரூ.250 விண்ணப்பதாரர் களால் செலுத்தப்பட்டு, சிப் பொருத்தப்பட்ட அட்டை களாக அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்க ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை தாமதம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, ஓட் டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான் றிதழ் ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் பொது மக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.

மாநிலம் முழுவதும் ஓட்டுநர் உரிமங்கள், வாகனப் பதிவுச் சான்றி தழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் டிஜிட்டல் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் வழங்கும் வசதி செப்.15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் அறிமுகம் செய்யப்படும். இதனால், புதிதாக வாகனம் வாங்குவோர் வாகனப் பதிவை அதாவது, டிஜிட்டல் ஆர்சி-யை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே போல, ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்ப தாரர்களுக்கு, அன்றைய நாளே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.

அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து மின்னணு முறையில் ஆவணங்களை சரிபார்க்க முடியும். இதன் மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப் படும். ஆவணம் தொலைந் தாலோ, சேதமடைந் தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அச்சிட்டுக் கொள்ளவும் முடியும்.

ஓட்டுநர் உரிமம் பெறு வதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும், வாகனப் பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்து சம்பந்த மான அனைத்து அலு வலக சேவைகளுக்கும் தமிழ்நாட்டில் எந்த ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து ‘Anywhere Registration/ Licensing” என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு முதலமைச்சர்  தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *