“கண்ணீர் சிந்த மாட்டோம்… உறுதியுடன் போராடுவோம்!” நேபாள பிரதமர் பாலேந்திர ஷா

இணையவழி கையெழுத்து இயக்கம்

காத்மாண்டு, செப். 3- போட்டேகோஷி ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவை உறுதியுடனும் தைரியத்துடனும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.

நேபாளம் – திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனிப்பாறைகள் சரிந்ததால் ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள், கடைகள், சாலைகள், பாலங்கள் போன்றவை அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 4,800-க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த பாதிப்பு குறித்து நேபாள நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பிரதமர் பாலேந்திர ஷா, “இந்த நெருக்கடியான நேரத்தில் நாட்டின் தலைமை தைரியம், ஆதரவு மற்றும் உறுதியை வழங்க வேண்டும். இந்த யதார்த்தத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். கண்ணீர் சிந்த மாட்டோம்.

ரசுவா, நுவாகோட், தாடிங் ஆகிய மூன்று மாவட்டங்கள் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும், இது ஒட்டுமொத்த நாட்டின் இதயத்திலும் விழுந்த அடி. இதற்கு எதிராக உறுதியுடனும் தைரியத்துடனும் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் போராடுகிறோம்.

மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளில் அனைத்து பாதுகாப்புப் படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத் தலையும் எச்சரிக்கையும் வழங்கி வருகின்றன.

ராணுவ உலங்கூர்தி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தனியார் உலங்கூர்திகளும் தேவை கருதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இலவச மருத்துவ சிகிச்சையை அளித்து வருவதுடன் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு மற்றும் தங்கமிடங்களை வழங்கி வருகிறது.

மின்சாரம், குடிநீர் வழங்கல், போக்குவரத்து ஆகியவற்றை மீட்டெடுக்க அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்” என தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *