மாவட்டப் போட்டியில் இரட்டை வெள்ளிப் பதக்கம் வென்று புதிய வரலாறு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரியார் கல்வி நிறுவனங்கள்

திருச்சி, செப்.3- மல்யுத்தக் களத்தில் மாவீரர்களாய் மிளிர்ந்த திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்: மாவட்டப் போட்டியில் இரட்டை வெள்ளிப் பதக்கம் வென்று புதிய வரலாறு!

வீரமும் விவேகமும் மோதும் மல்யுத்தக் களத்தில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவச் செல்வங்கள் தங்களின் அசாத்தியத் திறமையால் மாவட்ட அளவில் முத்திரை பதித்து இரட்டை வெள்ளிப் பதக்கங்களைச் சூடியுள்ளனர்.

தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் அங்கீகாரத்தோடு, திருச்சி மாவட்ட மல்யுத்த சங்கம் நடத்திய 2026–2027ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து திறமைவாய்ந்த வீரர், வீராங்கனைகள் களமிறங்கிய இக்கடும் போட்டியில், பெரியார் பள்ளி மாணவர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கப் பட்டியலில் தடம் பதித்தனர்.

வெற்றி வாகை சூடிய விவரங்கள்: மாணவி எம். லேவியா (8-ஆம் வகுப்பு): 15 வயதிற்குட்பட்டோருக்கான 46 கிலோ எடைப் பிரிவில், விறுவிறுப்பு நிறைந்த ‘ஃப்ரீ ஸ்டைல்’ (Freestyle) மல்யுத்த ஆட்டத்தில் களமிறங்கி, எதிரணியினரின் வியூகங்களை மின்னல் வேக உத்திகளால் தகர்த்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மாணவர் ஆர். ஆடன் ஹூபர்ட் (11-ஆம் வகுப்பு): 17 வயதிற்குட்பட்டோருக்கான 65 கிலோ எடைப் பிரிவில், வலிமையும் நுணுக்கமும் நிறைந்த ‘கிரிகோ ரோமன்’ (Greco Roman Style) ஆட்டத்தில் அனல் பறக்க மோதி இறுதிச் சுற்று வரை முன்னேறி இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் தட்டிச் சென்றார்.

மல்யுத்தக் களத்தில் வீறுநடை போட்டு பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும், அவர்களைப் பயிற்றுவித்த உடற்கல்வித்  ஆசிரியர்கள் கோகுல் மற்றும் சவுமியா ஆகியோரையும் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் சக அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் நெஞ்சாரப் பாராட்டித் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *