திருச்சி, செப்.27- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-ஆம் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாணவ-மாணவியரின் படைப்பாற்றலையும், சிந்தனைத் திறனையும் வெளிக்கொணரும் பல்வேறு போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
மழலையர் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினாப் போட்டி (பெரியார் 1000) மற்றும் ஓவியப் போட்டிகள் பல்வேறு சிந்தனைத் தூண்டும் தலைப்புகளில் நடத்தப்பட்டன. மாணவச் செல்வங்கள் அனைவரும் பெரியாரின் கொள்கைகளையும் சமத்துவச் சிந்தனைகளையும் தங்களது பேச்சிலும் எழுத்திலும் ஓவியத்திலும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி மேடையெங்கும் பெரியாரிய முழக்கத்தை எதிரொலிக்கச் செய்தனர்.
இப்போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஒருங்கிணைப்புப் பணிகளையும் பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியர் எஸ்.காட்வின் பொறுப்பாசிரியராக இருந்து மிகச் சிறப்பான முறையில் வழி நடத்தினார்.
போட்டிகளில் வெற்றி வாகை சூடிய மாணவச் செல்வங்களுக்குப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் எழுச்சியுடன் நடை பெற்றது.
பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்குப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டிச் சிறப்புரையாற்றினார்.
போட்டிகளின் தலைப்புகள் மற்றும் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர் விவரம்:
- பேச்சுப் போட்டி
மழலையர் பிரிவு (தலைப்பு: நான் விரும்பும் பெரியார்):
முதலிடம்: சாய் ரக்ஷிதா
இரண்டாமிடம்: ருத்ரா
மூன்றாமிடம்: உமைரா பானு
தொடக்கப் பிரிவு – 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை (தலைப்பு: பெரியார் குழந்தைகளின் நண்பர்):
முதலிடம்: அர்ஷியா ஷஸானா
இரண்டாமிடம்: நிலா
மூன்றாமிடம்: ஆதித்யா & உத்ரா
நடுநிலைப் பிரிவு – 4 மற்றும் 5-ஆம் வகுப்புகள் (தலைப்பு: பெரியாரின் சிந்தனைகள்):
முதலிடம்: ஆயிஷா சித்திகா
இரண்டாமிடம்: ஹாதியா இபாஃட் & பிரணவ் சாய்
மூன்றாமிடம்: தர்ஷனா, தனுசிறீ & ஆருத்ரா
உயர்நிலைப் பிரிவு – 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை (தலைப்பு: சமத்துவத்தின் முன்னோடி பெரியார்):
முதலிடம்: கவுத்திக் உபன்
இரண்டாமிடம்: சரபேஸ்வரன்
மூன்றாமிடம்: ஏந்திழை, யாழினி & முகுந்த் கிருஷ்ணா
மேல்நிலைப் பிரிவு – 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை (தலைப்பு: பெரியாரின் சிந்தனைகளும் இன்றைய தலைமுறையும்):
முதலிடம்: சைந்தவி
இரண்டாமிடம்: சுரேகா
மூன்றாமிடம்: சிறீ ஆருஷி, யாஸ்னா, சஃபா மர்சூகா & ஹாசினி
- கட்டுரைப் போட்டி
நடுநிலைப் பிரிவு – 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை (தலைப்பு: சமூக மாற்றத்தில் பெரியாரின் பங்கு):
முதலிடம்: அஸ்மா மரியம்
இரண்டாமிடம்: ஆயிஷா பர்வீன்
மூன்றாமிடம்: யுவனா சிறீ & ஜஷ்மிதா
மேல்நிலைப் பிரிவு – 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை (தலைப்பு: தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையும் சமூக நீதியும்):
முதலிடம்: யுவேரா
இரண்டாமிடம்: அஷ்பியா பர்வீன் & பிரணிதா
மூன்றாமிடம்: சரவணன் & அனாமிகா
- ஓவியப் போட்டி (தலைப்பு: பெரியாரின் உருவப்படம் / சமத்துவச் சமூகம்)
பிரிவு 1 (6 மற்றும் 7-ஆம் வகுப்புகள்):
முதலிடம்: அபிஜிதா
இரண்டாமிடம்: ரிதன்யா சிறீ
மூன்றாமிடம்: நிதர்ஷனா
பிரிவு 2 (8 முதல் 10-ஆம் வகுப்பு வரை):
முதலிடம்: சிறீஹரி
இரண்டாமிடம்: ஷிஃபானா
மூன்றாமிடம்: இர்பான்
பிரிவு 3 (11 மற்றும் 12-ஆம் வகுப்புகள்):
முதலிடம்: கிருத்திகா
இரண்டாமிடம்: தர்ஷனா
மூன்றாமிடம்: மோகனப்பிரியா
வரைபட ஓவியப் பிரிவு
முதலிடம்: சிறீமதி
இரண்டாமிடம்: அய்யப்பன்
மூன்றாமிடம்: நர்மதா
இவ்விழாவில் பள்ளி ஆசிரியப் பெருமக்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவியர் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
