கிருட்டினகிரி, செப். 2- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 30.08.2026 அன்று மாலை 4 மணியளவில் கிருட்டினகிரி பெரியார் மய்யம் மணியம்மையார் கூட்டரங்கில் மிகுந்த எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தின் தொடக்கத்தில் மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ச.மணிமொழி கடவுள் மறுப்புக் கூறினார்.
மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், மாவட்ட ப.க. அமைப் பாளர் இராம.சகாதேவன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மா.சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா. சரவணன் கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கியும் பெரியார் பிறந்தநாள் விழாவினை கொள்கை பிரச்சார எழுச்சி விழாவாக வீடுதோறும், தெருதோறும், ஊர்தோறும் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்பதை எடுத்துக் கூறி உரையாற்றினார்.
கூட்டத்தில் திராவிடர் கழக மகளிரணி மாநில துணைச் செயலாளர் மு. இந் திராகாந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முருகேசன், இல.ஆறுமுகம், மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்க டேசன், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ. செல்வம், நகரச் செயலாளர் அ.கோ.இராசா, மத்தூர் ஒன்றிய ப.க.தலைவர் மு.செயரட்சகன், மத்தூர் மகளிரணி நிர்வாகி ஜெ.பிரியா, மாவட்ட மாணவர் கழக நிர்வாகிகள் மா.ரூபிகாசிறீ, ஜெ. குமிழி ஆகியோர் கலந்துக்கொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர். நிறைவாக மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.சீனி வாசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நீட் ஒழிப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பிரச்சார பயணக்குழுவில் நான்கு நாட்களும் சிறப்பான வகையில் பங்கேற்ற ச.மணி மொழி, வ. ஆறுமுகம், ஜெ.குயிலி, இர. நிலவன் மற்றும் இரண்டு நாட்கள் பங்கேற்ற அண்ணா சர வணன் ஆகியோருக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாநில ப.க.துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் மாவட்ட ப.க. சார்பில் பேச்சு போட்டி நடத்த மாவட்ட ப.க. அமைப்பாளர் இராம.சகாதேவனிடம் ரூ1000 வழங்கினார். மேலும் மத்தூர் ஒன்றியத்தில் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி வருகின்ற 20/09/2026- அன்று மத்தூரில் (கழக குடும்பங்கள் சந்திப்பு) குடும்ப விழா-நடைபெறும் நிகழ்விற்கு மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகத்திடம் ரூ4000/-மும் வழங்கினார்.
தீர்மானங்கள்
உலக மனித நேய மாண்பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148 – ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினையொட்டி கிருட்டினகிரி கழக மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், கிளைக் கழகங்கள் தோறும் அவரது படத்திற்கு மாலை அணிவித்தும், இனமான கழக இலட்சியக் கொடியை ஏற்றியும், இல்லம்தோறும், தெருவெங்கும், ஊர்தோறும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவினை மிகுந்த எழுச்சியுடன் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.
திராவிடர் கழகத்தின் கொள்கைப் பிரச்சார ஏடுகள், விடுதலை மற்றும் உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிட் ஆகியவற்றின் பழைய சந்தாவை புதுப்பித்தும், புதியதாக சந்தாக்களை தொடர்ந்து திரட்டுவது எனவும் தீர்மானிக்கப் படுகிறது.
கிருட்டினகிரி மாவட் டம் கிருட்டினகிரி TO தருமபுரி தேசிய நெடுஞ் சாலையில் அவதானப்பட்டி பனந்தோப்பு அருகாமையி லிருந்து டேம் ரோடு வரை சாலையில் இருபுறங்களிலும் மல்லிகைப் பூ விற்பனையால் போக்குவரத்திற்கு இடையூறாக திடீரென வாகனங்களை நிறுத்தி மல்லிகைப் பூ விற்பனையா ளர்களிடம் வாங்குவதால் விபத்துகள் ஏற்படுகிறது. அதேபோல டேம் ரோடு சர்வீஸ் சாலையிலிருந்து திம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகாமையிலுள்ள சர்வீஸ் சாலையில் இருபுறம் உள்ள மீன்கடைகளால் போக்குவரத்திற்கு இடையூறாக கனரக சரக்கு வாகனங்களை சர்வீஸ் சாலையில் நிறுத்தி வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் நின்று பூவிற்பதையும், திம்மாபுரம் சாலையை ஒட்டியப்பகுதிகளில் மீன்கடைகளாலும், தொடர் விபத்துகள் உயிர்ச் தேங்கள் ஏற்படுகின்றது. வரத்திற்கு இரண்டு மூன்று விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச் தேசங்கள் ஏற்படுகிறது, எனவே உயிர்சேதங்களை தடுக்க போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமாய் மாவட்ட நிர்வாகத்தையும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர் களையும் இம்மாவட்ட திராவிடர் கழகக் கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது.
“நீட்” தேர்வையும், உயிர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் நடைபெற்ற மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரை பிரச்சார பேரணியில் இரண்டாம் குழுவிற்கு கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் ச.மணிமொழி தலைமை ஏற்று வழிநடத்த வாய்ப்பு வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இம்மாவட்டக் கூட்டம் மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது, மேலும் இரண்டாம் குழுவில் கிருட்டினகிரி மாவட்டத்திலிருந்து சிறப்பாக பங்கேற்று செய லாற்றிய ச.மணிமொழி, வ.ஆறுமுகம், இர. நிலவன், ஜெ.குயிலி ஆகிய நால்வருக்கும் மற்றும் இரண்டாம் குழுவில் பங்கேற்ற அனைவருக்கும் இம்மாவட்டக் கூட்டம் பாராட்டுகளையும், வாழ்த்து களையும் தெரிவித்து கொள்கிறது.
நீட் ஒழிப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பிரச்சார பேரணிக்கு சிறப்பான வகையில் வரவேற்பு வழங்கிய மத்தூர், காவேரிப்பட்டணம் ஒன்றியங்களின் அனைத்து பொறுப்்பாளர் ்களுக்கும்,தோழர்களும் இம்மாவட்டக் கூட்டம் நன்றியை தெரிவித்து கொள் கிறது.
