பண்ருட்டி-அண்ணா கிராமம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்ட முடிவுகள்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பண்ருட்டி-புதுப்பேட்டையில் திராவிடர் கழக திறந்தவெளி மாநாடு!
தமிழர் தலைவர் பங்கேற்கிறார்!

பண்ருட்டி, ஆக. 11- பண்ருட்டி மற்றும் அண்ணா கிராமம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 9.8.2026 அன்று காலை 11 மணியளவில் பண்ருட்டி ஜோதி ஸ்டுடியோவில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கழகத் தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி, பொதுக்குழு உறுப்பினரும், ஜோதி போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருமான கோ.புத்தன், நா.தாமோதரன், அண்ணா கிராம ஒன்றிய முன்னாள் திமுக செயலாளர் நா.பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் இரா.பெரியார்செல்வம், மாவட்ட கழகத் துணைத் தலைவர் சி.மணிவேல், அண்ணா கிராமம் ஒன்றிய கழகத் தலைவர் இரா.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் இரு.இராஜேந்திரன், அமைப்பாளர் பா.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இரமேஷ்,  மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ப.சிவன், நகரத் தலைவர் ந.புலிக்கொடி, அ.பெ.குப்பம் கழக அமைப்பாளர் பெ.பாண்டியன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். இந்நிகழ்வில் வேகா கொல்லை கதிர்வேல், மேல்பட்டாம்பாக்கம் சா.வேல்முருகன், குறிஞ்சிப்பாடி. லாலுபிரசாத், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் டிஜிட்டல் இரா.இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

ஆகஸ்ட் 30 அன்று புதுப்பேட் டையில் திறந்தவெளி மாநாடு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடத்துவது என்றும்,

பண்ருட்டி மற்றும் அண்ணா கிராம ஒன்றியங்களில் வாய்ப் புள்ள ஊர்களில் கழகத்தை புதியதாக ஏற்படுத்துவது மற்றும் புதுப்பிப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் நூலகர் கண்ணன் நன்றி உரை ஆற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *