கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 1.9.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) பேரணிக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: செப்டம்பர் 5-ஆம் தேதி டில்லியில் நடைபெற உள்ள சி.ஜே.பி. பேரணிக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது; பேரணி சட்டத்திற்குட்பட்டு அமைதி யாக நடைபெற வேண்டும் என அறிவுறுத்தியது. பேரணியின்போது சட்டம்-ஒழுங்கை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும், விதிமீறல் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குஜராத்தில் எஸ்.சி. / எஸ்.டி. வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்பு: குஜராத்தில் 2022 முதல் 2024 வரை எஸ்சி, எஸ்டி மக்களுக்கு எதிரான 4,890 வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன; இதில் சுமார் 81% வழக்குகள் எஸ்.சி. மக்களுக்கு எதிரானவை. இவ்வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் விகிதம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது.

தி இந்து:

* எஸ்.அய்.ஆர். (SIR) – 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் நீக்கம்: வாக்காளர் பட்டியலின் மூன்றாம் கட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) இதுவரை 6 கோடிக்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இப்பணி நடைபெற்றுள்ள நிலையில், நாகாலாந்து மற்றும் திரிபுரா இறுதி வரைவு பட்டியல்கள் பின்னர் வெளியிடப்பட உள்ளன.

தி டெலிகிராப்:

* அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்: “வெளிநாட்டில் அறிவார்ந்த வார்த்தைகள்; உள்நாட்டில் மவுனம். வார்த்தைகள் முக்கியமல்ல; செயல்கள்தான் பேச வேண்டும்!” என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் X தளத்தில் பதிவு. திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாகரிகா கோஷ், மோகன் பாகவத்தை “பாசாங்குத்தனம் மற்றும் இரட்டை வேடம்” எனக் குற்றச்சாட்டு. “மோகன் பாகவத் இதுபோன்ற கருத்துகளை அமெரிக்காவில் அல்ல, இந்தியாவில்தான் தெரிவிக்க வேண்டும்,” என்று சிவசேனா (UBT) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் விமர்சனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* 7.8% ஜி.டி.பி. வளர்ச்சி – “வேலைவாய்ப்புகள் எங்கே?”. முதல் காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 7.8% எனப் பதிவான நிலையில், பிரதமர் மோடி இதை சிறப்பான சாதனை என பாராட்டினார். ஆனால், “இந்த பொருளாதார வளர்ச்சி ஏன் வேலைவாய்ப்புகளாகவும் மக்களின் செழிப்பாகவும் மாறவில்லை?” என காங்கிரஸ் கேள்வி

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *