சென்னை, செப். 1– காஞ்சிபுரம் புதிய நகர மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாரம்பரியப் பகுதி புனரமைப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளில் தொடரந்து தொழில் வளர்ச்சி அடைந்து வருவதை தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றன. அதன் அடிப்படையில் சென்னைக்கு அருகில் உள்ள நகரங்களையும் விரிவாக்கம் செய்து கடந்த திமுக ஆட்சியில் திட்டங்கள் தீட்டப்பட்டன. அதில் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டன. அந்த அறிக்கையின் அடிப்படையில் சாத்தியகூறுகள் ஆய்வு செய்யப் பட்டது.
தி.மு.க ஆட்சியில் வரையறுக் கப்பட்ட காஞ்சிபுரம் புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்ட அறிக்கை தயார் செய்து, சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கடந்த 2025 ஏப்ரல் 29 ஆம் தேதி அறிக்கை அளித்தது. ஆனால் அதன் மீதான இறுதி முடிவுகள் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், விஜய் தலைமை யிலான தவெக அரசு அதனை ரத்து செய்துள்ளது.
இது குறித்த அரசாணையை வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலளார் கிர்லோஷ் குமார் 2026 ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட்டுள்ளார். மேலும் காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித்திட்டம் ரத்துச் செய்யப் பட்டதற்கான அறிவிப்பை அரசி தழிலும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசா ணையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) 28.4.2025 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ‘அம்ருத்’ (AMRUT) திட்டத்தின் கீழ் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை மற்றும் திட்ட மிடல் பள்ளி (School of Architecture and Planning) மூலம் காஞ்சிபுரம் உள்ளூர் திட்டமிடல் பகுதிக்கான (155.25 சதுர கி.மீ) முதன்மைத் திட்டம் (Master Plan) தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக அதன் வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககக் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தால் தயாரிக்கப்பட்ட முதன்மைத் திட்டம் மேம்பட்ட நிலையில் இருப்பதால், 29.4.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளரால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், ‘காஞ்சிபுரம் புதிய நகரத்திற்கான புதிய நகர மேம்பாட்டுத் திட்டம்’ மற்றும் ‘காஞ்சிபுரம் நகரத்திற்கான விரிவான மேம்பாடு மற்றும் பாரம்பரியப் புத்துயிரூட்டல் திட்டம் (2025-2045) ஆகியவற்றை தயாரிப்பதற்கான முன்மொழிவைக் கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர், 2022-2023-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட அறிவிப்பில் இடம்பெற்ற ‘காஞ்சிபுரம் புதிய நகரத்திற்கான புதிய நகர மேம்பாட்டுத் திட்டம்’ மற்றும் ‘காஞ்சிபுரம் நகரத்திற்கான விரிவான மேம்பாடு மற்றும் பாரம்பரியப் புத்துயிரூட்டல் திட்டம் (2025-2045)’ ஆகிய வற்றைத் தயாரிப்பதற்கான முன்மொழிவைக் கைவிடுவது குறித்து உரிய ஆணைகளை வெளியிடுமாறு அரசிடம் கோரி யுள்ளார். இதன் அடிப்படையில் தான் தவெக ஆட்சி அமைந்தப் பின்னர் தான் காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் பகுதியில் செயல்படுத்தப்பட்ட புதுநகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு 62.78 சதுர கி.மீ பரப் பளவில் 18 கிராமங்களை உள்ள டக்கி வெளியிடப்பட்ட அந்த அரசிதழை ரத்து செய்து தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு அரசிதழை வெளியிட்டுள்ளது.
சென்னை மற்றும் சென் னையை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்த கடந்த தி.மு.க ஆட்சியில் புதுநகர் வளர்ச்சி திட்டங்களானது செயல்படுத்தப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், மறைமலைநகர், சிறீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக் கப்பட்டது. அதன்படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் இந்த திட்டங்களானது தொடங்கப்பட்டு, கருத்து கேட்பு கூட்டங்கள் முடிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு இறுதியாக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
